அறந்தாங்கி அருகே சரக்கு லாரி மோதி 3 பேர் பலி 8 பேர் காயம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கட்டுமாவடியில் சரக்கு மினிலாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உள்பட 3 பேர் இறந்தார்கள்.


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கட்டுமாவடியில் சரக்கு மினிலாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உள்பட 3 பேர் இறந்தார்கள்.
மணமேல்குடி அருகேயுள்ள கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது கட்டுமாவடி மீனவக்கிராமம் இங்கு அதிகாலை முதல் மின்கள் ஏலம் நடைபெறுவது வழக்கம் புதன்கிழமை காலை இங்குள்ள பேருந்துநிறுத்தத்தில் பல்ர் பேரூந்திற்காக காத்திருந்தனர்.
இந்நிலையில் மீமிசலிலிருந்து நாகப்பட்டினம் நோக்கி வைக்கோல் ஏற்றிக்கொண்டு மினிசரக்குலாரி வேகமாக சென்றுகொண்டிருந்தது. வேனை ஓட்டுநர் முருகன் என்பவர் இயக்கிவந்துள்ளார்.
கட்டுமாவடி பேரூந்துநிறுத்தம் வரும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் பேரூந்திற்கு காத்திருந்தவர்கள் மீது மோதியதில் இதில் கட்டுமாவடியை சேர்ந்த வேதரத்தினம்(53), தோப்புவயல் பகுதியை சேர்ந்த சித்திரைவேல்(55), பேராவூரணி களமங்குடாவைச்சேர்ந்த ஜோதி(29) உள்ளிட்ட 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மேலும் இவ் விபத்தில் வல்லவன்பட்டினத்தை சேர்ந்த ராஜேஸ்வரி, பாப்பா, வைரத்தாள், கோமதி, அதிராம்பட்டினத்தை சேர்நத வசந்தி, கள்ளக்குடியை சேர்ந்த பஞ்சவர்ணம், பால்ராஜ், சித்திரைவேல் உள்ளிட்ட 8 பேர் பலத்த காயமடைந்து புதுக்கோட்டை அறந்தாங்கி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இது குறித்து மணமேல்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வேன் ஓட்டுநர் முருகனை கைது செய்தனர். இவ் விப்த்து காரணமாக கிழக்கு கடற்கரைசாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...