அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சேலத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை: மின்னல் பாய்ந்து பெண் பலி

சேலம் மாவட்டத்தில் திங்கள்கிழமை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் பாய்ந்ததில் பெண் பரிதாபமாக

News image
Updated On :2 ஜூன் 2014, 2:36 pm

தங்கராஜா

சேலம் மாவட்டத்தில் திங்கள்கிழமை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் பாய்ந்ததில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

 சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் முடிவடைந்த நிலையிலும் திங்கள்கிழமை பகலில் வெயிலின் தாக்கம் வெகுவாக இருந்தது.

 இந்த நிலையில் பிற்பகலில் திடீரென மழை மேகங்கள் திரண்டன. சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் இந்த மழை பெய்தது. சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குள்பட்ட கன்னியாம்பட்டி என்ற இடத்தில் வேடத்தாள், பெருமாயி ஆகியோர் 100 நாள் வேலை திட்டத்தில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

 அப்போது மின்னல் தாக்கியதில் வேடாத்தாள் (34)அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பெருமாயி மயங்கி விழுந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பெருமாயியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

 தகவல் அறிந்ததும் கொங்கணாபுரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.