குஜராத்தில் பாஜக நிர்வாகி கொலை நெல்லை, தூத்துக்குடியைச் சேர்ந்த மூவர் சேலம் நீதிமன்றத்தில் சரண்
குஜராத்தில் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்டது தொடர்பாக திருநெல்வேலி, தூத்துக்குடியைச் சேர்ந்த மூன்று பேர் சேலம் ஐந்தாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில்


குஜராத்தில் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்டது தொடர்பாக திருநெல்வேலி, தூத்துக்குடியைச் சேர்ந்த மூன்று பேர் சேலம் ஐந்தாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனர்.
குஜராத் மாநிலம் சூரத் லால்சர்வேஜா பகுதியில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இவர்கள் ஹோட்டல், டீக்கடை, தள்ளுவண்டி கடைகள் வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், மே 10ஆம் தேதி அங்குள்ள தமிழர்கள் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சூரத் மாநகராட்சி மேயரின் உறவினரான குபேந்திரபாய் சோமாபாய் பட்டேலிடம் ஒருதரப்பினர் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சோமாபாய்பட்டேல் தரப்பினர், புகார் செய்தவர்களின் எதிர்தரப்பினரிடம் இருந்து இரு சக்கர வாகனங்களை பறித்து சென்றனராம்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட தரப்பினர், சோமாபாய் பட்டேல் தரப்பினரிடம் தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தின்போது சோமாபாய் பட்டேல், அவரது கூட்டாளிகள் இருவருக்கு கத்திகுத்து விழுந்தது. படுகாயம் அடைந்த சோமாபாய் பட்டேல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். பாரதிய ஜனதா பிரமுகரான சோமாபாய் பட்டேல் இறந்ததை அடுத்து அப்பகுதியில் வன்முறை ஏற்பட்டது.
இதுபற்றி சூரத் நகரின் மகிதாபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கொலை வழக்கு தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் பொய்கைமேடு பகுதியைச் சேர்ந்த மாரிதேவன் மகன் குருசாமி(37), தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த ஆறுமுகசெல்வன்(22), கோவில்பட்டியைச் சேர்ந்த ராஜா(28) ஆகியோர் சேலம் ஐந்தாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரண் அடைந்தனர்.
தொடர்ந்து, இவர்களது சரண் குறித்து குஜராத் மாநில காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் நடந்த கொலையில் சேலத்தில் மூவர் சரணடைந்த சம்பவத்தால் சேலம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...