நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பழனி நகராட்சி கூட்டத்தில் தனியார் கேபிள்பதிப்பை கண்டித்து கவுன்சிலர்கள் காரசார விவாதம்

பழனி நகராட்சியின் நகர்மன்ற கூட்டம் செவ்வாய்க்கிழமை பழனியாண்டவர் ஹாலில் நடைபெற்றது.  கூட்டத்துக்கு தலைவர் வேலுமணி தலைமை வகித்தார்.  துணைத் தலைவர் முருகானந்தம்

News image
Updated On :23 செப்டம்பர் 2014, 12:33 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் தனியார் கேபிள் பதிப்பிற்காக ரோடுகள் தோண்டப்படுவதை கண்டித்து கவுன்சிலர்கள் காரசாரமாக விவாதம் நடத்தினர்.

பழனி நகராட்சியின் நகர்மன்ற கூட்டம் செவ்வாய்க்கிழமை பழனியாண்டவர் ஹாலில் நடைபெற்றது.  கூட்டத்துக்கு தலைவர் வேலுமணி தலைமை வகித்தார்.  துணைத் தலைவர் முருகானந்தம் முன்னிலை வகித்தார்.  நகராட்சி ஆணையர்(பொறுப்பு) செந்தில்குமார், நகரமைப்பு அலுவலர் விமலா, சுகாதார அலுவலர் டாக்டர் பொற்கொடி உள்ளிட்ட பல கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். கடந்த காலங்களில் கேள்வி நேரத்தின் போதே தகராறு ஏற்பட்டு கூட்டம் பாதியில் முடிந்த போவதால் இந்த முறை கூட்டம் துவங்கிய உடன் அஜெண்டா வாசிக்கப்பட்டு நகர்மன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் பெறப்பட்டது.  கூட்டத்தில்  நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் ரெங்கநாதன், பழனியம்மாளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நகர்மன்ற தலைவர் வேலுமணி சார்பில் பைபாஸ் ரவுண்டானா பகுதியில் முன்னாள் முதல்வர் அண்ணாவுக்கும், நகர்மன்ற துணைத் தலைவர் சார்பில் ரவுண்டானா கார்நிறுத்தம் பகுதியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கும் சிலைகள் வைக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

கேள்விநேரம் துவங்கிய பின் நகரில் எரியாத தெருவிளக்குகள் குறித்து கவுன்சிலர் அகிலாண்டம், காளீஸ்வரி ஆகியோர் தலைவரிடம் புகார் தெரிவித்தனர்.  பழனி நகரில் தற்போது பல பகுதிகளில் தனியார் தொலைபேசித்துறை கேபிள் பதிப்பதற்காக சாலைகளை தோண்டி அப்படியே விட்டு விட்டு சென்றுள்ளனர்.  இதற்கு யார் அனுமதி வழங்கியது என கேள்வி எழும்பிய போது அதிகாரிகள் பலரும் மழுப்பலான பதிலை தெரிவித்தனர்.  அப்போது கவுன்சிலர்கள் முஜிபுதீன், ஷாகுல்அமீது, செபாஸ்டின் ஆகியோர் அதிகாரிகளின் தவறுகளை ஆதாரத்துடன் தெரிவித்தனர்.  பழனி நகரின் எல்லைகள் மட்டுமன்றி சிவகிரிப்பட்டி ஊராட்சி, கோதைமங்கலம், கலிக்கநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் கேபிள் பதிக்க அதிகாரிகள் கணக்கீடு செய்து பணத்தை பெற்றுள்ளது குறித்து அவர்கள் கேள்வி எழுப்பிய போது தலைவர் வேலுமணி அதற்கான விசாரணை செய்யப்படும் என கூறினார். 

மேலும், தனியார் கேபிள் நிர்வாகம் குழி தோண்ட மிக குறைவான தொகையையே நகராட்சி நிர்வாகம் பெற்றுள்ளது எதற்கு என்றும் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.  முடிவாக தனியார் கேபிள் பதிப்பில் நகராட்சி நிர்வாகம் ஏராளமான ஊழல்களை செய்துள்ளது என்று கவுன்சிலர்கள் சத்தம் போடவே மன்ற கூட்டம் முடிந்து விட்டதாக தலைவர் வேலுமணி கூறி விட்டு கூட்டத்தை நிறைவு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.