மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் தேவஸ்தான தேர்த்திருவிழா: முதல்வர் பங்கேற்பு

பிரசித்திபெற்ற வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் தேவஸ்தான ஆடிப் பெருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2015, 9:07 am

சுஜித்குமார்

பிரசித்திபெற்ற வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் தேவஸ்தான ஆடிப் பெருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையிலிருந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் தொடர்ச்சியாக வீராம்பட்டினமே திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். ஐந்தாம் வெள்ளியன்று தேர்த்திருவிழா நடைபெறும். ஆறாம் வெள்ளியன்று முத்துப் பல்லக்கு திருவிழா நடைபெறும். இந்த ஆலையத்தில் உள்ள தேவதாருவின் முழு உருவம் மரத்தால் செய்யப்பட்டடு அமைக்கப்பட்டது.

அலங்கரிக்கப்பட்ட தேரில் செங்கழுநீரம்மன் தேரடி வீதியில் உலா வந்து தேர் முற்றத்தில் வந்து நிற்கும். இந்த தேர் திருவிழாவின் சிறப்பு, பிரஞ்சு ஆட்சிக்கலாம் முதலே ஆளுநர் தேரின் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைப்பர். இந்த வழக்கம் இன்றும் அனுசரிக்கப்படுகிறது

இக்கோயிலின் ஆடிப்பெருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7-ம் தேதி விமானத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. பின்னர் நாகம், ரிஷபம், சிம்மம், யானை, குதிரை, அன்ன வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடந்தது.

தேர்த் திருவிழா

இதன் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முதல்வர் என்.ரங்கசாமி, பேரவைத் தலைவர் சபாபதி, அமைச்சர்கள் ராஜவேலு, பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேறறு தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.முக்கிய வீதிகள் வழியாக சென்று தேர் நிலையை அடைந்தது. புதுவை,மற்றும் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம், நீர், மோர் வழங்கப்பட்டது.சனிக்கிழமை இரவு முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பல் உற்சவம், வரும் 21-ம் தேதி இரவு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் முத்துப்பல்லக்கில் வீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுவினர், ஊர் மக்கள் செய்திருந்தனர்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.