அகில இந்திய பொதுவேலைநிறுத்தம்: புதுவையில் 11 இடங்களில் மறியல், வாகனங்கள் ஓடாது என அறிவிப்பு
12 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 2-தேதி நடக்கவுள்ள அகில இந்திய பொதுவேலைநிறுத்தப் போராட்டத்தின்போது புதுவையில் 11 இடங்களில் மறியல் நடத்தப்படும்.


12 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 2-தேதி நடக்கவுள்ள அகில இந்திய பொதுவேலைநிறுத்தப் போராட்டத்தின்போது புதுவையில் 11 இடங்களில் மறியல் நடத்தப்படும். ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஓடாது என இந்திய கம்யூனிóஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஆர்.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், வேலைபாதுகாப்பை உறுதி செய்யாத நிறுவனங்களுக்கு சலுகைகளை ரத்து
செய்ய வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தேசிய சமூகபாதுகாப்பு நிதியத்தை உருவாக்கி நிதி ஒதுக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.15 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும்.மத்திய பா.ஜ.க. அரசு சமூக பாதுகாப்பு திட்டங்களை குறைத்து விட்டு ஊதிய குறைப்புக்கு வழிவகை செய்கிறது. பெருமுதலாளிகளின் நிறுவனங்கள் தழைக்க உதவுகிறது.
நிரந்தர தொழிலாளர் முறையை ஒழித்து விட்டு, ஒப்பந்தத் தொழிலாளர் முறையை அமல்படுத்துகிறது. ரயில்வே, பாதுகாப்பு, காப்பீடு துறைகளில் நேரடி அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்து உள்ளனர்.
தொழிலாளர்களுக்கு பாதிப்பு உண்டாக்கும் வகையில் 44 தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தி நிறுவனங்களுக்கு ஆதரவாக 4 சட்டங்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள், தொழிலாளர்களுக்கான கொள்கைகளை கைவிட்டு, செயல்படுகின்றனர்.
அதே போல் புதுவையில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் அரசு, 6000-க்கு மேற்பட்ட அரசு சார்பு தொழிலாளர்களுக்கு ஊதியமே வழங்கவில்லை. மேலும் வேலையில்லாத் திண்டாட்டத்தை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதைக் கண்டித்தும், 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை நடத்த முடிவு செய்துள்ளன. 11 இடங்களில் மறியல் போராட்டம் அதன்படி புதுச்சேரியிலும் செப்டம்பர் 2-ம் தேதி பொதுவேலைநிறுத்தம் நடத்தப்படும்.
புதுச்சேரியில் ஆட்டோ, சரக்கு வாகனங்கள், பஸ்கள் இயக்கப்படாது. தொழிற்பேட்டைகளிலும் நிறுவனங்கள் இயங்காது. அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக நடத்தப்படும் பொதுவேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்.
புதிய பஸ் நிலையம், முத்தியால்பேட்டை, ராஜா தியேட்டர், ராஜிவ் காந்தி சதுத்கம், இந்திரா காந்தி சதுக்கம், பாகூர் தபால் நிலையம், வில்லியனூர் இந்தியன் வங்கி,
திருக்கனூர் மெயின் ரோடு, மதகடிப்பட்டு மெயின் ரோடு, அரியாங்குப்பம், சேதராப்பட்டு தொழிற்பேட்டை, காரைக்கால் தபால் நிலையம், மாஹே, ஏனாம் உள்ளிட்ட 11 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஆர். ராஜாங்கம், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநில செயலர் சோ.பாலசுப்பிரமணியன், புருஷோத்தமன், விடுதலைச் சிறுத்தைகள் சிவந்தவன் உள்பட பலர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...