சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

எழுத்தாளர் விக்கிரமன் காலமானார்

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த எழுத்தாளர் விக்கிரமனின் இயற்பெயர் வேம்பு. இவர் 54 ஆண்டுகள் தொடர்ந்து

News image
Updated On :2 டிசம்பர் 2015, 1:18 am IST

எழுத்தாளர் கலைமாமணி விக்கிரமன் (87), சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.
 சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த எழுத்தாளர் விக்கிரமனின் இயற்பெயர் வேம்பு. இவர் 54 ஆண்டுகள் தொடர்ந்து "அமுத சுரபி' மாத இதழின் ஆசிரியராக இருந்தவர். அதோடு, இலக்கிய பீடம் மாத இதழையும் நடத்தி வந்தார்.
 இவர் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பதவியையும் வகித்துள்ளார். இவரது தந்தை சுப்பிரமணிய ஐயர், பாரதியாருடன் சுதேசமித்திரன் நாளிதழில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 இவருக்கு மனைவி ராஜலட்சுமி, மணி, கண்ணன் ஆகிய இரண்டு மகன்கள், உமா தேவி, ஜெயந்திர மணி, ஹேமா சங்கரன் ஆகிய 3 மகள்கள் உள்ளனர்.
 இறந்த விக்கிரமனின் உடல் அவரது மேற்கு மாம்பலம் இல்லத்தில் (3, ஜெய்சங்கர் தெரு) தற்போது வைக்கப்பட்டுள்ளது. இவரது இறுதிச் சடங்கு சென்னையில் புதன்கிழமை (டிசம்பர் 2) பிற்பகலில் நடைபெற உள்ளது.
 தொடர்புக்கு: 9003175272.
 எழுத்தாளர்கள் இரங்கல்: விக்கிரமனின் மறைவுக்கு எழுத்தாளர்கள் அசோகமித்திரன், ஸ்டாலின் குணசேகரன், திருப்பூர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.