அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.

News image
Updated On :17 டிசம்பர் 2015, 3:51 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், ஓட்டமடம் தெருவைச் சேர்ந்தவர் தர்மர் மகன் மாரிச்செல்வம் (40). இவருக்கு பாண்டீஸ்வரி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உண்டு. மாரிச்செல்வம், ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு நிலையம் அருகேயுள்ள ஒரு ஒலி, ஒளி அமைக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

வியாழக்கிழமை திருவண்ணாமலை சாலையில் மாதாநகர் அருகே ஒரு சாமியார் இறந்த 48-வது குருபூஜை நிகழ்ச்சிக்கு பந்தல் அமைக்கும் பணி நடைபெற்றது. இதில் மாரிச்செல்வம் வேலை செய்து கொண்டிருந்தார். பந்தலுக்கு மேலாகச் சென்று மின்வயர்களை சரி செய்து கொண்டிருந்தபோது, மின்சாரம் தாக்கி கீழே விழுந்து பலத்த காயமுற்று ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிச்செல்வம் உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.