ஸ்ரீவில்லிபுத்தூர் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள அனைத்து சி.எஸ்.ஐ., ஆர்.சி உள்ளிட்ட அனைத்து சபைகளிலும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.


ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள அனைத்து சி.எஸ்.ஐ., ஆர்.சி உள்ளிட்ட அனைத்து சபைகளிலும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணன்கோவில் சாலையில் உள்ள ஆசீர்வாத மாரநாதா சபையில், பாஸ்டர் ஒய்.டேவிட்குமார் சிறப்பு கிறிஸ்துமஸ் தேவ செய்தி அளித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான சபை மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் அனைத்துலக சமாதானத்திற்காகவும், தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிறப்பு பிரார்த்தனை ஏறெடுக்கப்பட்டது. குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு வழங்கினார்.
சி.எஸ்.ஐ. தோமா தேவாலயத்தில் அதிகாலை சிறப்பு கிறிஸ்துமஸ் ஆராதனை சபைகுரு அருள்திரு ஜே.ஜான் கமலேசன் தலைமையில் நடைபெற்றது. பாடகர் குழு தலைவர் ஞா.எட்வின் கனகராஜ் தலைமையில் பாடகர் குழுவினர் சிறப்பு கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடினார்கள். சபையின் உபதேசியார் எபனேசர் செல்லராஜா வேதபாடம் வாசித்தார். இயேசு கிறிஸ்து உலகத்திற்கு வந்த நோக்கம் குறித்துத சபை குரு சிறப்பு தேவ செய்தி அளித்தார். பின்னர் திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. பின்னர் திருமுழுக்கு ஆராதனை நடைபெற்றது. மாலையில் விளையாட்டுப் போட்டிகளும், கிறிஸ்துமஸ் மர விழாவும் நடைபெற்றது. சபையின் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை சபையின் செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ஆத்மசீலன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தார்கள்.
ஆர்.சி. தேவாலயம் உள்ளிபட நகரில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு கிறிஸ்துமஸ் ஆராதனைகள் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...