மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுவையில் சுனாமி நினைவு தினம்: முதல்வர் உள்ளிட்டோர் அஞ்சலி

சுனாமி ஆழிப்பேரலை தாக்கிய 11-ம் ஆண்டு நினைவு தினம் புதுச்சேரியில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி முதல்வர் ரங்கசாமி உள்பட பலர் மலரஞ்சலி செலுத்தினர்.

News image
Updated On :26 டிசம்பர் 2015, 9:43 am

சுஜித்குமார்

சுனாமி ஆழிப்பேரலை தாக்கிய 11-ம் ஆண்டு நினைவு தினம் புதுச்சேரியில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி முதல்வர் ரங்கசாமி உள்பட பலர் மலரஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி இந்தோனேசியா அருகே கடலில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் சுனாமி ஆழிப்பேரலை உருவாகியது. இதில் இந்தோனேசியா, இந்தியா, மலேசியா, தாய்லாந்து, இலங்கை உள்பட பல்வேறு கடலோர நாடுகளில் 2.3 லட்சம் பேர் உயிரிழந்தனர்.

குறிப்பாக தமிழகம், புதுவையிலும் சுனாமி தாக்குதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. புதுச்சேரியில் 26 பேரும், காரைக்காலில் 400 பேரும் சுனாமியால் உயிரிழந்தனர். கடும் பொருள்சேதமும் உண்டானது.

அவர்களின் நினைவாக மீனப்பகுதிகளில் சுனாமி நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக அஞ்சலி செலுத்தப்படுகிறது. அதே போல் நிகழாண்டில் 11-வது ஆண்டாக சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கடற்ரை காந்தி சிலை பின்புறம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சுனாமி பேனருக்கு முதல்வர் என்.ரங்கசாமி மலர்வளையம் வைத்தார். தொடர்ந்து கடலில் பால் ஊற்றி மறைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.