மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஜிப்மர் மருத்துவமனையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் மையம் துவக்கம்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் சுகாதாரத்தேவைகளுக்கான புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் மையத்தை மத்திய பல்கலை. துணைவேந்தர் டாக்டர் அனிசா பி.கான் தொடங்கி வைத்தார்.

News image
Updated On :30 டிசம்பர் 2015, 11:00 am

சுஜித்குமார்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் சுகாதாரத்தேவைகளுக்கான புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் மையத்தை மத்திய பல்கலை. துணைவேந்தர் டாக்டர் அனிசா பி.கான் தொடங்கி வைத்தார்.

ஜிப்மர் மருத்துவமனை சார்பில் நோயாளிகளின் நலனுக்காக பல்வேறு முன்னோடி திட்டங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. தொலையுணர்வு சேவை மையம், செயற்கை கருவூட்டல் மையம், கல்லிரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உள்பட பல்வேறு சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் நோயாளிகள் பயன்பெறும் வகையில் ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

ஜிப்மர் மருத்துவமனையில் பணிபுரியும் பேராசிரியர்கள், இளம் ஆராய்ச்சியாளர்கள், மாணவ, மாணவியர் உருவாக்கும் கண்டுபிடிப்புகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், அவற்றுக்கு காப்புரிமை பெறும் வகையிலும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு மக்கள் மற்றும் நோயாளிகளுக்கு குறைந்த செலவில் சுகாதாரத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கண்டுபிடிப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.