அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வயர்லெஸ் கருவிகளை நஷ்டஈட்டுத் தொகை ரூ.13 ஆயிரத்துடன் பழுது நீக்கித் தர உத்தரவு

பழுதான வயர்லெஸ் கருவிகளை ரூ.13 ஆயிரம் நஷ்ட ஈட்டுத் தொகையுடன் பழுது நீக்கித் தர ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :30 டிசம்பர் 2015, 12:28 pm

கோ.ஜெயக்குமார்

பழுதான வயர்லெஸ் கருவிகளை ரூ.13 ஆயிரம் நஷ்ட ஈட்டுத் தொகையுடன் பழுது நீக்கித் தர ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

சிவகாசி, பி.கே.எஸ்.ஆறுமுகம் ரோட்டைச் சேர்ந்தவர் ஹரிகரன் மகன் ஆதித்தன். இவர் கணினி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்திற்குத் தேவையான வயர்லெஸ் உபகரணங்களை வாங்க முடிவு செய்து சென்னை அசோக்நகரில் உள்ள இன்பின் ஐ.டி. இன்போசெஸ் நிறுவனத்தை அணுகியுள்ளார். இந்த உபகரணங்களைப் பொருத்த ரூ.1,29,725 செலவாகும் என நிறுவனம் கூறியுள்ளது. இந்த பொருட்களுக்கு இரு ஆண்டுகள் உத்தரவாதத்தையும் நிறுவனம் கொடுத்துள்ளது. இதனை நம்பி ஆதித்தன் 7.7.11-ம் தேதி ரூ.1 லட்சத்தையும் பின்னர் ரூ.20 ஆயிரத்தையும் கொடுத்துள்ளார். தனது ஆட்களை அனுப்பி இன்பின் ஐடி நிறுவனம் வயர்லெஸ் கருவிகளைப் பொருத்தியுள்ளது. இவை சில நாட்களிலே பழுதாகியுள்ளது. இது குறித்து ஹரிகரன் தெரிவித்துள்ளார். ஆனால் சரியான முறையில் அவர்கள் பழுது நீக்கித் தரவில்லையாம். பின்னர் அதே நிறுவனத்தினர் ரூ.65 ஆயிரம் பெற்றுக் கொண்டு பழுது நீக்கியுள்ளார்கள். மீண்டும் கருவிகள் பழுதாகியுள்ளது. இது குறித்து பலமுறை நிறுவனத்திற்கு புகார் செய்துள்ளார்கள். ஆனால் சரியான முறையில் பழுது நீக்கித் தரவில்லையாம்.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ஆதித்தன் புகார் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி வ.பாலசுந்தரகுமார், உறுப்பினர்கள் ச.சங்கர், ச.கற்பகச்செல்வி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

வயர்லெஸ் கருவிகளை, இன்பின் ஐ.டி. இன்போசெஸ் நிறுவனம் 1 மாதத்திற்குள் பழுது நீக்கித் தர வேம்டும். தவறும் பட்சத்தில் அல்லது பழுது சரி செய்ய முடியாமல் போகும் பட்சத்தில், கருவிகளை திரும்ப எடுத்துக் கொண்டு ரூ.1.20 லட்சத்தை ஆதித்தனுக்கு திருப்பித் தர வேண்டும். மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவிற்கு ரூ.3 ஆயிரமும் ஆதித்தனுக்கு வழங்க உத்தரவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.