கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலம்

டெங்கு நோய் எதிர்ப்பு மாதத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு நலவழித்துறை மற்றும் தேசிய கொசு மற்றும் பூச்சுகளால் பரவும் நோய் தடுப்புத்திட்டம் சார்பில் விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 ஜூலை 2015, 9:38 am

சுஜித்குமார்

டெங்கு நோய் எதிர்ப்பு மாதத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு நலவழித்துறை மற்றும் தேசிய கொசு மற்றும் பூச்சுகளால் பரவும் நோய் தடுப்புத்திட்டம் சார்பில் விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

குயவர்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியை மலேரியா உதவி இயக்குநர் சுந்தர்ராஜன் கலந்து கொண்டு கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

சுகாதார உதவி ஆய்வாளர் அய்யனார், மருத்துவர் நித்தியானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பேரணியில் புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக்கல்லூரி மாணவிகள் மற்றும் பல்வேறு செவிலியர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு டெங்குகாய்ச்சல் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே வலியுறுத்தும் வகையில் பேரணியாக சென்றனர்.

பேரணியின் போது மாணவிகள் டெங்கு காய்ச்சல் மற்றும் நோய்கள் குறித்தும் அவைகளை தடுப்பது குறித்தான பதாகைகளை கையில் ஏந்திச்சென்றனர். மேலும் பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்களையும் வழங்கினர். முக்கிய வீதிகளின் வழியாக சென்ற இப்பேரணி இறுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிறைவுபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.