சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பாபநாசம், மணிமுத்தாறு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

News image
Updated On :26 ஜூலை 2015, 12:09 pm

ஷேக் அப்துல்காதர்

பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

குற்றாலம் சீசன் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதியிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குற்றாலத்திற்கு சுற்றுலா வரும் பயணிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் குளிக்க தவறாமல் வருகை தருகின்றனர்.

விடுமுறை தினமான சனி, ஞாயிற்றுக்கிழமை பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கணிசமாக அதிகமாக இருந்தது. பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு 600 க்கும் மேற்பட்ட வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததால், அருவிச் சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

இதேபோல், மணிமுத்தாறு அருவியிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சென்னை, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, ராமனாதபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து அருவிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.

அருவிகளுக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததால், வனப்பகுதியில் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளை வலியுறுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.