நெல்லையில் கடும் வெப்பம்: வேகமாக குறையும் அணைகளின் நீர்மட்டம்
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லை. இதன் காரணமாக அணைகளின்


திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லை. இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
நிகழ் பருவத்தில் தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்யவில்லை. இதனால் எதிர்பார்த்தவாறு திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் உயரவில்லை. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கார் பருவ சாகுபடிக்கு அணைகளில் இருந்து வினாடிக்கு 1,400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. 103 டிகிரிக்கு குறையாமல் வெப்பம் காணப்படுகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிபட்டு வருகின்றனர். வெப்பத்தை தணிக்க நீர் நிலைகளை தேடி செல்லும் சூழல் காணப்படுகிறது.
கடும் வெப்பம் நிலவி வருவதாலும், மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் நீர்வரத்து வெகுவாக குறைந்து காணப்படுகிறது.
வியாழக்கிழமை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 463.98 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 18 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 96.22 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 24.37 கனஅடியும், கொடுமுடியாறு அணைக்கு விநாடிக்கு 26.98 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 74.45 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 81.69 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 74.90 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 55.80 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 63 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 66.54 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 80.50 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 29.50 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 46 அடியாகவும் இருந்தது.
பாசனம் குடிநீர் தேவைக்கு பாபநாசம், சேர்வலாறு அணைகளிலிருந்து விநாடிக்கு 1056 கனஅடியும், மணிமுத்தாறு அணையில் இருந்து விநாடிக்கு 375 கனஅடியும், கடனாநதி அணையிலிருந்து 110 கனஅடியும், ராமநதி அணையிலிருந்து 40 கனஅடியும், கருப்பாநதி அணையிருந்து 10 கனஅடியும், அடவிநயினார் அணையிலிருந்து 25 கனஅடியும், கொடுமுடியாறு அணையிலிருந்து 50 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
வேகமாக குறைகிறது: அணைகளுக்கு பெரிய அளவில் நீர்வரத்து இல்லாததாலும், பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதால் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதேநிலை நீடித்தால் கார் பருவ சாகுபடிக்கு முழுமையாக தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...