பழனியில் நீதிமன்ற உத்திரவின் பேரில் ஜப்தி செய்யப்பட்ட அரசுப்பேருந்து
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா நீலமலைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் நம்பிராஜன்(65). இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். கடந்த 1999ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ம் தேதி


பழனியில் நீதிமன்ற உத்திரவின் பேரில் அரசுப்பேருந்து ஜப்தி செய்யப்பட்டு நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா நீலமலைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் நம்பிராஜன்(65). இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். கடந்த 1999ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ம் தேதி மூலச்சத்திரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியே வந்த அரசுப்போக்குவரத்துக்கழகம் பழனி கிளையை சேர்ந்த அரசுப்பேருந்து மோதியதில் நம்பிராஜன் தலைமையில் பலத்த காயமடைந்தார். இதைத் தொடர்ந்து மூன்று இலட்சம் ரூபாய் இழப்பீடு கோரி பழனி சார்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
கடந்த 2001ம் ஆண்டு வழக்கு விசாரணை முடிவில் பழனி கிளைக்கு ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நீதிபதி உத்திரவிட்டார். ஆனால் தொகை அதிகம் என்று போக்குவரத்து நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் விசாரணை செய்யப்பட்டது. விசாரணை முடிவில் பழனி சார்பு நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு நியாயமானது என்றும் கூறி இழப்பீட்டுத் தொகையை இரண்டு இலட்சமாக வழங்க உத்திரவிடப்பட்டது. ஆனால் இதுவரை இழப்பீட்டுத்தொகை வழங்கப்படாததால் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன் இழப்பீட்டுத்தொகை வட்டியுடன் சேர்த்து ரூபாய் 3 இலட்சத்து 31 ஆயிரத்து 491 ரூபாய் ஆனதால் அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய உத்திரவிட்டார். அதனடிப்படையில் செவ்வாய்க்கிழமை பழனி பேருந்து நிலையத்தில் இருந்த பழனி கிளைக்கு சொந்தமான அரசுப்பேருந்தை நீதிமன்ற பணியாளர்கள் நோட்டீஸ் ஒட்டி ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டு வந்து நிறுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...