தொலைதூரக்கல்வி பயில்பவர்கள் பலருக்கு ஹால் டிக்கெட் வராததால் அதிருப்தி

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி பயில்பவர்கள் பலருக்கு கால் டிக்கெட் வராததால் அதிருப்தி கொண்டு சிரமம்  அடைந்துள்ளனர்.
Updated on
1 min read

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி பயில்பவர்கள் பலருக்கு கால் டிக்கெட் வராததால் அதிருப்தி கொண்டு சிரமம்  அடைந்துள்ளனர்.

அண்ணாமலை பல்கலைகழக தொலைக்தூர கல்வி மூலம் ஆசிரியர் மற்றும் அலுவலர்கள் பலர் பதவி உயர்வு மற்றும் தேவைகளுக்காக எம்.ஏ, பிலிட் உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு பல்கலைக்கழகம் சார்பில் மே , டிசம்பர் மாதம் இதற்கான தேர்வுகளை அதற்கென தமிழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படிப்பு சென்டர்கள் அமைக்கப்பட்டு கட்டணம்  பெறப்பட்டு பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. மே, டிசம்பர் மாதம் நடத்தப்படும் தேர்வுகளுக்கு ஹால் டிக்கெட்கள் தேர்வுக்கு முந்தைய இருவாரத்திற்கு முன்பு ஆன்லைனில் அனுப்பபடுகிறது. அதனை டவுன்லோடு செய்து  தேர்வு நடைபெறும் நாளில் அந்த ஹாலுக்கு கொண்டு சென்றால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படும் நிலை உள்ளது.

தற்போது இந்த மாதத்திற்கான தேர்வு கடந்த 19ஆம்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் பிலிட் உள்ளிட்ட படிப்புகள் மேற்கொண்டு வருபவர்கள் பலருக்கு ஹால் டிக்கெட் அனுப்பப்படவில்லை. சாத்தான்குளம், திருச்செந்தூர் பகுதியில் ஹால் டிக்கெட் வராததால்  ஏமாற்றமடைந்த தேர்வு எழுதுபவர்கள்  திருச்செந்தூரில் நடைபெறும் தேர்வு மையத்துக்கு வந்துள்ள பல்கலைகழக ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டால் , அவர்கள் இந்த ஆண்டு முதல் விதிமுறைகள்  மாற்றப்பட்டுள்ளது. நாங்கள்  ஒன்றும் செய்ய இயலாது எனவும், தாங்கள் அடுத்த  டிசம்பர் மாதம் அதற்கான தேர்வு கட்டணம் கட்டி தேர்வு எழுதுங்கள் தெரிவிக்கிறார். இதனால் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர்  ஏமாற்றம் அடைந்ததுடன் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் கூறுகையில்,  தேர்வு இந்த தேதி நடைபெறும்  என அறிவிக்கப்பட்டவுடன் அதற்கான தேர்வு கட்டனம் மற்றும் விண்ணபத்தை செலுத்தினேன். ஆனால் தேர்வு எழுத ஹால்டிக்கெட் வரவில்லை. இதனை திருச்செந்தூரில் உள்ள பல்கலைகழக ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டால் முறையான பதிலை கூற மறுக்கின்றார்.  கடந்த ஆண்டு  ஹால்டிக்கெட் வராதவர்களுக்கு சிறப்பு அனுமதியளிக்கப்பட்டு தேர்வு எழுதினர். ஆனால் இந்த ஆண்டு அது மாற்றப்பட்டு விட்டது என மறுத்து வருகின்றனர். மேலும் அண்ணாமலை பல்கலைகழகத்தில் இதற்கென  உதவி தகவல் தெரிவிப்பதாக 8 தரைவழி போன்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை எடுத்து பதில் கூற ஆள் இல்லை.  மேலும்  சிலர் பல்கலைகழகம் உள்ள சிதம்பரத்திற்கே சென்று விளக்கம் கேட்டனர். ஆனால் அங்கும் ஹால் டிக்கெட் வழங்கிட அனுமதி மறுக்கப்பட்டதால் மிகுந்த அதிருப்தி அடைந்து திருப்பியுள்ளனர் என்றார் அவர்.

ஆதலால் ஹால் டிக்கெட் வராதவர்களுக்கு பல்கலைகழகம் சிறப்பு அனுமதி அளித்து தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com