தமிழகத்தின், ராமேஸ்வரம் நகரில் அமையவிருக்கும் கலாம் நினைவகத்தில், அவர் இந்திய அரசுக்கு ஆட்சிய தொண்டுகள் குறித்த முப்பரிமாண (3 Dimension) காட்சியகம் அமைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், ஏவுகணை நாயகன் என்ற அழைக்கப்பட்ட விஞ்ஞானியும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான அப்துல் கலாம் நினைவாக, அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் ஒரு நினைவகம் அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிவித்தார்.
அந்த நினைவகத்தை எவ்வாறு நிர்மாணிப்பது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் புதுதில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், நகர மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தேர்தல் ஆணைய முன்னாள் ஆணையர் என். கோபாலகிருஷ்ணன், கலாச்சாரத் துறை செயலர் நரேந்திரகுமார் சின்ஹா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் ராமேஸ்வரம் நகரில் அமையவிருக்கும் கலாம் நினைவகத்தில், அவர் இந்திய அரசுக்கு ஆட்சிய தொண்டுகள் குறித்த முப்பரிமாண (3 Dimension) காட்சியகம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. எனினும் எவ்வித இறுதி முடிவும் மேற்கொள்ளப்படவில்லை.
மேலும், நினைவகம் அமைப்பதற்கு நிலம் வழங்கிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
ராமேஸ்வரத்தில் அமையவிருக்கும் கலாம் நினைவகத்தில் நூலகம், அருங்காட்சியகம் மற்றும் தியானக் கூடம் ஆகியவை இடம்பெறும்.
மேலும், அங்கு அக்னி ஏவுகணை மாதிரியும், பாரம்பரிய இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் அரங்குகளும், கலாமின் படைப்புகளும் இடம் பெறும் என தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓராண்டாக நீடிக்கும் நடவடிக்கை! இந்திய வானில் மே 24 வரை பாக். விமானங்கள் பறக்க தடை!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


