பெருமாள் ஏரிப்பகுதி கரை உடைப்புகளை சரிசெய்யும் பணியை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை துரிதப்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு நிதி மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 5 அமைச்சர்களை அனுப்பி வைத்துள்ளார்.
இக்குழுவினர் 3-வது நாளாக சனிக்கிழமை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்படி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குள்ளஞ்சாவடியிலுள்ள பெருமாள் ஏரிக்குச் சென்று பார்வையிட்டார். 5.9 அடி கொள்ளளவு கொண்ட ஏரியில் தற்போது 520 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 1380 கன அடியாக உள்ளது. ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2,750 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. எனவே, ஏரியின் கரையில் சிறிதாக ஏற்பட்டுள்ள உடைப்பை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பை: வங்கதேசத்துக்கு 140 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நெதர்லாந்து!

ஐஐஎம் மும்பை-ல் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்..?

7 மாதங்களுக்கு முன்பு அணியில் இல்லை... அறிமுக உலகக் கோப்பை ஆட்டத்தில் மிரட்டிய ஆஸி. கோல்கீப்பர்!

மூவர் அரைசதம் விளாசல்; ஒருநாள் தொடரை முழுமையாகக் கைப்பற்றுமா வங்கதேசம்?
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



