பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பெருமாள் ஏரிப் பகுதி கரை உடைப்புகள் சரிசெய்யும் பணி: ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு

பெருமாள் ஏரிப்பகுதி கரை உடைப்புகளை சரிசெய்யும் பணியை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

Published On :

பெருமாள் ஏரிப்பகுதி கரை உடைப்புகளை சரிசெய்யும் பணியை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை துரிதப்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு நிதி மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 5 அமைச்சர்களை அனுப்பி வைத்துள்ளார்.

இக்குழுவினர் 3-வது நாளாக சனிக்கிழமை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அதன்படி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குள்ளஞ்சாவடியிலுள்ள பெருமாள் ஏரிக்குச் சென்று பார்வையிட்டார். 5.9 அடி கொள்ளளவு கொண்ட ஏரியில் தற்போது 520 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 1380 கன அடியாக உள்ளது.   ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2,750 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. எனவே, ஏரியின் கரையில் சிறிதாக ஏற்பட்டுள்ள உடைப்பை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.