மணப்பாறை அருகே சாலை விபத்தில் சிறுவன் பலி: ஓட்டுநர் கைது
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டியில் கார் மோதி பள்ளி மாணவன் பலியான விபத்தில் கார் டிரைவரை போலிசார் கைது செய்தனர்.


திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டியில் கார் மோதி பள்ளி மாணவன் பலியான விபத்தில் கார் டிரைவரை போலிசார் கைது செய்தனர்.
வையம்பட்டி அருகே உள்ள சேசலூரைச் சேர்ந்தவர் விவசாயி சின்னக்காளை இவரது மகன் சந்தோஷ்குமார்(9) இவர் சரளப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகின்றார்.நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது சென்னையில் இருந்து சபரிமலைக்கு சென்ற கார் சந்தோஷ்குமார் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் பலியானார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வையம்பட்டி போலிஸ் எஸ்.ஐ அசோகன் சம்பவ இடத்திற்கு சென்று சந்தோஷ்குமார் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சென்னை காந்திரோட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் கார் டிரைவர் கலைஞானம்(30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...