ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய ஊழியர்கள் திடீர் தர்ணா போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்கள் திடீரென நிர்வாக அலுவலக கட்டடம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :12 அக்டோபர் 2015, 3:39 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்கள் திடீரென நிர்வாக அலுவலக கட்டடம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு போராட்டம் விளைவாக தமிழக அரசு 2 குழுக்களை அனுப்பி விசாரணை மேற்கொண்டு அக்குழு 11 பிரிவுகளின் கீழ் முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசுக்கு அறிக்கை சமர்பித்தது. பின்னர் தமிழக அரசு உயர்கல்வித்துறை மூலம் தமிழக சட்டப்பேரவையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு பல்கலைக்கழகத்தே அரசே ஏற்று நடத்தி வருகிறது.

இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் நீண்ட வருடங்களாக பணியாற்றி வரும் ஊழியர்கள் சுமார் 250 பேர் தங்களை நிரந்தரப்படுத்தக்கோரி பல்கலைக்கழக நிர்வாக கட்டடம் முன்பு சாலையில் அமர்ந்து திங்கள்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திங்கள்கிழமை காலை 10 மணி முதல் போராட்டத்தை தொடர்ந்த அவர்கள் மாலை வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை ஆதரித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக பணியாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் கிள்ளை ரவீந்திரன், எஸ்சி., எஸ்டி ஆசிரியர்கள் பணியாளர்கள் நல சங்கத் தலைவர் விஜய் உள்ளிட்டோர் பேசினர். தொகுப்பூதிய ஊழியர்களின் திடீர் போராட்டத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.