சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. பருவ மழையை நன்கு பொழிந்தால், நிரம்பி கோடைக்காலத்தில் குடிநீர் பிரச்னை தீரும்.
கடந்த ஆண்டு இதே அக்டோபர் மாதத்தில் இந்த ஏரிகளின் நீர் அளவை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மழை இல்லாததால் மிகவும் குறைவான நீர் அளவுடன் பெரும் பகுதி வறண்ட நிலையில் இவை உள்ளன.
இதில் சோழவரம் ஏரியில் கடந்த 3 மாதமாக தண்ணீர் கிடையாது; அதாவது மொத்தக் கொள்ளவு 881 மில்லியன் கன அடி கொண்ட சோழவரம் ஏரி வறண்டு மைதானமாக காட்சி அளிக்கிறது.
ஏரிகளின் நிலவரம்: சென்னையின் முக்கிய பெரிய நீர் ஆதாரமான புழல் ஏரியில் 17 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. (கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி).
செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. ஆனால் இப்போது 205 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டும்தான் உள்ளது.
இதே போன்று 3231 மில்லியன் கனஅடி கொள்ளளவு உடைய பூண்டி ஏரியில் இப்போது 54 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. கிருஷ்ணா தண்ணீர் வராததால் ஏரி வேகமாக வறண்டு வருகிறது.
இந்த 4 ஏரிகளிலும் மொத்த தண்ணீர் இருப்பு 297 மில்லியன் கன அடிதான் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 2,169 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை ஏரிகள் 30 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு வறண்டு விட்டதால் ஏரிகளில் தேவையான அளவு தண்ணீர் எடுக்க முடியவில்லை.
உதவும் வீராணம் ஏரி: தற்போது சென்னைக்கு வீராணம் ஏரி தண்ணீர்தான் கை கொடுத்து வருகிறது. இந்த ஏரியில் இருந்து தினமும் 180 மில்லியன் கன அடி தண்ணீர் சென்னை மக்களின் குடிநீருக்காக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடல் நீரை குடிநீராக்கும் நெம்மேலி, மீஞ்சூர் நிலையங்களில் இருந்து தலா 100 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது. இது தவிர ஆரணி, கொசஸ்தலையாற்றுப்
படுகைகளில் அமைந்துள்ள காரணை, சிறுவானூர், புல்லரம்பாக்கம், மூவுர், கீழானூர், மேலானூர், வெள்ளியூர், மாகரல் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 273 தனியார் விவசாயக் கிணறுகளை வாடகைக்கு அமர்த்தி சுழற்சி முறையில் லாரிகள் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது.
தினமும் 540 லாரிகள் மூலம் 5,000-க்கும் மேற்பட்ட நடைகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர வீதிகளில் உள்ள 2 ஆயிரம் குடிநீர் தொட்டிகளில் குடிநீர் நிரப்பி மக்களுக்கு வினியோகம் செய்து வருகின்றனர்.
ஒட்டுமொத்தமாக சென்னைக்கு தினமும் 834 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால் பல்வேறு குடிநீர் ஆதாரங்கள் மூலமாக 600 மில்லியன் லிட்டர் குடிநீர்தான் தற்போது விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னை மக்களின் குடிநீர்த் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்ய பல்வேறு கட்ட முயற்சிகளை குடிநீர் வாரியம் மேற்கொண்டு வருகிறது.
பருவ மழையை எதிர்பார்த்து..: மழைப்பொழிவு தொடர்ந்து குறைந்து வருவதால், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு சென்னையின் பிரதான ஏரிகளில் நீர்மட்டம் பலமடங்கு குறைந்துள்ளது. இந்த நிலையில் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் வரும் 28, 29-ஆம் தேதிகளில் வட கிழக்கு பருவமழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில், ஏரிகளில் தண்ணீர் நிரம்புவதற்கான நடவடிக்கைகளை அரசுத் துறைகள் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.
மழைநீரையும் சேமிக்க வேண்டுகோள்...
இதுகுறித்து அரசுத் துறை அலுவலர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:
மக்களின் குடிநீர்த் தேவைக்காக கூடுதலாக விவசாய நிலங்களில் வாடகைக்கு கிணறுகளை அமைப்பது, பழுதடைந்த குடிநீர்த் தொட்டிகளை உடனுக்குடன் சீரமைப்பது, குடிநீர் லாரிகளின் நடைகளை தேவைக்கேற்றவாறு அதிகரிப்பது உள்பட பல்வேறு நடவடிக்கைககளை எடுத்து வருகிறோம்.
வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யும்போது சென்னையில் உள்ள பிரதான ஏரிகளின் நீர்மட்டம் உயர்வதுடன் நகரில் சில பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை முற்றிலுமாக நீங்கும்.
இதுதவிர, வரும் கோடைக்காலத்திலும் குடிநீர்ப் பிரச்னையை சமாளிக்கவும் முடியும்.
அதே வேளையில் பொதுமக்கள் தங்களது வீட்டைச் சுற்றி உள்ள பகுதிகளில் தேங்கும் மழைநீரைச் சேமிக்க குடிநீர் வாரியம் கூறிய செயல்முறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றனர்.
குடிநீர் ஏரிகளில் தற்போதுள்ள நீர் அளவு
சென்னையின் குடிநீர் ஆதாரங்களாந புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் வெள்ளிக்கிழமை (அக்.23) நிலவரப்படி நீர் அளவும் (மில்லியன் கன அடி), கடந்த ஆண்டு இதே நாளில் (அக்டோபர் 23, 2014) நீர் அளவும் (மில்லியன் கன அடி) ஒப்பிடப்பட்டு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


