மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இலங்கை பிரச்னையில் மோடி இரட்டைவேடம்: நாராயணசாமி

இலங்கை தமிழர்கள் பிரச்னையில் பிரதமர் நரேந்திர மோடி இரட்டைவேடம் போடுவதாக காங்கிரஸ் பொதுச் ளர் வி.நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

News image
Updated On :24 அக்டோபர் 2015, 10:02 am

சுஜித்குமார்

இலங்கை தமிழர்கள் பிரச்னையில் பிரதமர் நரேந்திர மோடி இரட்டைவேடம் போடுவதாக காங்கிரஸ் பொதுச் ளர் வி.நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2009-ல் இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் விசாரணை செய்து அறிக்கை அளித்திருந்தது. அதில் சர்வதேச நீதிபதிகள் விசாரணை நடத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.

அப்போதிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியது. அந்நாட்டு அரசால் ஏற்கெனவே நியமிக்கப்பட்ட நல்லெண்ண விசாரணைக் குழு அளித்த அறிக்கையில், ராணுவத்தினர் பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் இலங்கை அரசு அந்த அறிக்கையையே மூடி முறைக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இந்த பிரச்னையில் பிரதமர் மோடி மெளனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.