நகைக் கடை உரிமையாளரின் காரை கடத்தி ரூ. 60 லட்சம் கொள்ளை: ரூ. 1.20 கோடி தப்பியது
காஞ்சிபுரம் அருகே பட்டபகலில் குடியாத்தம் நகைக் கடை உரிமையாளரின் காரை கடத்திய கும்பல் ரூ. 60 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது. இதில் ரூ. 1.20 கோடி ரொக்க பணம் தப்பியது.


காஞ்சிபுரம் அருகே பட்டபகலில் குடியாத்தம் நகைக் கடை உரிமையாளரின் காரை கடத்திய கும்பல் ரூ. 60 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது. இதில் ரூ. 1.20 கோடி ரொக்க பணம் தப்பியது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சந்தப்பேட்டை பஜாரில் நகை கடை நடத்தி வருபவர் அசோக்குமார் ஜெயின் (36). இவர் அதே பகுதியில் நகை கடையை விரிவுப்படுத்தும் பணியை செய்து வந்தார். அதற்காக கூடுதல் நகை வாங்க அசோக்குமார் ஜெயின் திட்டமிட்டார். அதன்படி நகை கடை ஊழியர்கள் பிச்சாண்டி (31), மெய்வண்ணன் (35) ஆகியோரிடம் தலா ரூ. 60 லட்சம் வீதம் தனித்தனி 3 பைகளில் ரூ.1.80 கோடி ரொக்கப்பணத்தை கொடுத்து புதன்கிழமை சென்னைக்கு அனுப்பினார். காரை பாஸ்கர் (35) ஓட்டினார். இவர்கள் காரில் குடியாத்தத்தில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர்.
காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பாலுசெட்டிச்சத்திரம் அருகே பொன்னியம்மன் பட்டரை என்ற இடத்தில் வந்த போது, அவர்களை பின் தொடர்ந்து 2 கார்கள் வந்தன. அப்போது அந்த 2 காரில் இருந்த மர்மநபர்கள், தங்களது காரை வேகமாக ஓட்டி நகைக் கடை உரிமையாளரின் காருக்கு முன்னே சென்று நிறுத்தினர். ஆனால் அவர்களிடம் இருந்து தப்பி காரை ஓட்டிச் செல்ல பாஸ்கர் முயன்றார். அப்போது அவர்கள் கற்களை வீசினர். . இதனால் டிரைவர் பாஸ்கர் பதட்டமடைந்து காரை சாலையோரத்தில் நிறுத்தினார்.
அப்போது அந்த கார்களில் இருந்த 10 பேர் கொண்ட முகமூடி அணிந்த கும்பல் இறங்கி, பிச்சாண்டி, மெய்வண்ணனிடம் கத்தியை காட்டி மிரட்டினர். அப்போது காரில் இருந்த டிரைவர் உள்ளிட்ட 3 பேரும் பயத்தில் காரை விட்டு இறங்கி ஓடினர். இது குறித்து உடனடியாக அசோக்குமார் ஜெயினுக்கு தகவல் கொடுத்தனர். நகைக்கடை உரிமையாளர் காரை கடத்தி ஓட்டிச் சென்ற கும்பல், பாலுச்செட்டிசத்திரம் மெயின் ரோட்டில் காரை நிறுத்திவிட்டு ஒரு பணப்பையில் இருந்த ரூ. 60 லட்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டு தாங்கள் வந்த காரில் ஏறி தப்பினர். இது குறித்து அசோக்குமார் ஜெயின் பாலுச்செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் தொலைபேசியில் புகார் செய்தார்.
இதற்கிடையில் கார் பாலுச்செட்டிசத்திரத்தில் நிற்பது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு காஞ்சிபுரம் சரக காவல் துறை துணைத் தலைவர் தமிழ்சந்திரன் (பொறுப்பு), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முத்தரசி, காஞ்சிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் பாலச்சந்திரன், பாலுச்செட்டிசத்திரம் காவல் ஆய்வாளர் சேகர், காஞ்சிபுரம் கிராமிய காவல் ஆய்வாளர் சாரதி உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று. காரை மீட்டனர்.
இதைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் விரைந்து சென்று தடயங்களை பதிவு செய்தனர். மோப்ப நாய் சீசர் வரவழைக்கப்படு துப்பறியப்பட்டது. சீசர் சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. மேலும் குற்றவாளிகளைப் பிடிக்க காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, சென்னை ஆகிய மாவட்ட போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பட்டபகலில் ரூ. 60 லட்சம் ரொக்கம் பணம் கொள்ளை நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலுச்செட்டிசத்திரம் காவல் ஆய்வாளர் சேகர், கிராமிய காவல் ஆய்வாளர் சாரதி, சிவகாஞ்சி காவல் ஆய்வாளர் பிரபாகர், விஷ்னு காஞ்சி காவல் ஆய்வாளர் லட்சுமிபதி, தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் டீக்காராம் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பட்டபகலில் ரூ. 60 லட்சம் முகமூடி கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...