மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பொதுப்பணித்துறை தினக்கூலி ஊழியர்கள் முற்றுகைப் போராட்டம்

காலிப்பணியிடங்களில் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி பொதுப்பணித்துறைதலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் முழு நேரதினக்கூலி ஊழியர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை முற்றுகை போராட்டம் மேற்கொண்டனர்.

News image
Updated On :14 செப்டம்பர் 2015, 7:02 am

சுஜித்குமார்

காலிப்பணியிடங்களில் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி பொதுப்பணித்துறைதலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் முழு நேரதினக்கூலி ஊழியர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை முற்றுகை போராட்டம் மேற்கொண்டனர்.

பொதுப்பணித்துறையில் 500-க்கு மேறப்ட்ட காலியிடங்கள் உள்ளன. இவற்றில் 25 சதவீதம் பொதுப்பணித்துறை தினக்கூலி ஊழியர்களைக் கொண்டும், மீதம் 75 சதவீதம் பணியிடங்களை வெளிநபர்களைக் கொண்டும் நிரப்ப நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுப்பணித்துறை முழுநேர தினக்கூலி ஊழியர்கள் முற்றுகைப் போராட்டம் மேற்கொண்டனர். பொதுச் செயலாளர் சாதிக் பாட்சா, தலைவர் முரளி ஸ்டாலின்

ஆகியோர் தலைமையில் 150-க்கு மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சாதிக்பாட்சா கூறியதாவது:

பொதுப்பணித்துறை காலிப்பணியிடங்களில் 100 சதவீதம் முழுநேர தினக்கூலி ஊழியர்களைக் கொண்டே நிரப்ப வேண்டும். வெளிநபர்களைக் கொண்டு நிரப்பக்கூடாது. நாங்கள் 11 ஆண்டுகளாக பொதுப்பணித்துறையிலேயே தினக்கூலி ஊழியர்களாக பணிபுரிந்து வருகிறோம்.

வெளிநபர்களை நியமித்தால் நாங்கள் பாதிக்கப்படுவோம். இப்பிரச்னைக்கு நிர்வாகம் உரிய முடிவு காணும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றார் சாதிக்பாட்சா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.