மாநிலங்களவைத் தேர்தல் எதிரொலி: 4 ஆண்டுகளுக்கு பின்னர் புதுவையில் அதிமுக-என்.ஆர்.காங்கிரஸ் மீண்டும் கூட்டணி
புதுச்சேரியில் மாநிலங்களவைத் தேர்தல்யொட்டி திடீர் திருப்பமாக மீண்டும் அதிமுக-என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி உருவாகி உள்ளது.


புதுச்சேரியில் மாநிலங்களவைத் தேர்தல்யொட்டி திடீர் திருப்பமாக மீண்டும் அதிமுக-என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி உருவாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சியில் முதல்வராக இருந்த ரங்கசாமியை கடந்த 2009-ம் ஆண்டு பதவியில் இருந்து விலகுமாறு செய்தனர். பின்னர் அவர் 2011-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் என்ற தனிக்கட்சியைத் தொடங்கி, அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார்.பின்னர் இரு கட்சிகளும் சேர்ந்து 20 இடங்களைப் கைப்பற்றினர். ஆனால் தேர்தலுக்கு பின்னர் இரு கட்சிகளின் கூட்டணியும் முறிந்தது.
அதிமுகவைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏக்கள் எதிர்க்கட்சியாக செயல்பட்டு, என்.ஆர். அரசை தீவிரமாக விமர்சித்து வந்தனர்.இதற்கிடையே புதுச்சேரியில் உள்ள ஒரே மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வரும் 28-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் போட்டியின்றி தேர்வு பெறுவார் என்ற நிலை இருந்தபோது, அக்கட்சியிõன் கொறடா நேரு, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி அடைந்து பதவி விலகினார்.
மேலும் முதல்வர் ரங்கசாமி பரிந்துரைத்த தொழிலதிபர் கோகுலகிருஷ்ணனை வேட்பாளரா நிறுத்த 3 எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் மறைமுகமாக திமுக முன்னாள் மத்திய அமைச்சருக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
இóந்நிலையில் 2 முறை என்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதிருப்தி எம்.எல்.ஏக்களை சமாதானம் செய்ய முடியவில்லை. மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுகவின் நிலைப்பாடு குறிதது தெரியாத நிலை இருந்தது. திடீர் திருப்பம்
இதற்கிடையே வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு இறுதி நாளான வெள்ளிக்கிழமை காலையில் பேரவை வளாகத்தில் மீண்டும் என்.ஆர் காங். எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது.அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அப்போது திடீரென அதிமுக எம்.எல்.ஏக்கள் அன்பழகன், பாஸ்கர் ஆகியோர் முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்துப் பேசினர்.
அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் மாநிலங்களவைத் தேர்தல் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதிமுக கட்சித் தலைமை முடிவின்படி மாநிலங்களவை தேர்தல் வேட்பாளராக அதிமுகவைóச் சேர்ந்தவரை நிறுத்த முடிவு எடுக்கப்பட்டது. முதல்வர் ரங்கசாமி பரிந்துரைத்த தொழிலதிபர் கோகுல கிருஷ்ணனை அதிமுக வேட்பாளராக நிறுத்தவும் முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் தெரிவித்தார்.
வேட்பாளர் கோகுலகிருஷ்ணனை அதிமுகவில் உறுப்பினராக சேர்த்து நிறுத்த இரு தரப்பும் முடிவு செய்தன. இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக அதிமுக-என்.ஆர்.காங்கிரஸ் இடையே முறிந்திருந்த கூóட்டணி மீண்டும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...