கும்மிடிப்பூண்டி அடுத்த கோட்டக்கரை அருகில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பத்தை சேர்ந்த முருகன்(26) சிகிச்சை பலனளிக்காமல் சென்னை அரசு மருத்துவனையில் சனிக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியை சேர்ந்த கோதண்டன் மகன் லாரி டிரைவர் முருகன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினரான லாரி டிரைவர் ராமு(22) என்பவருடன் பைக்கில் பின்னால் அமர்ந்து கும்மிடிப்பூண்டியில் இருந்து பெத்திக்குப்பம் நோக்கி வந்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அருகே திடீர் நகர் பகுதியில் இவர்கள் வந்த பைக் முன்னால் சென்றுக் கொண்டிருந்த லோடு ஆட்டோ மீது மோதியது. இதில் பைக்கில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்ட நிலையில் பைக்கை ஓட்டிவந்த ராமுவிற்கு லேசான காயம் ஏற்பட்டது.
பைக்கின் பின்னால் உட்கார்ந்து வந்த முருகனுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில்
இவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் சனிக்கிழமை மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து குறித்து முருகனின் சித்தப்பா மகன் சுதாகர் அளித்த புகாரின் அடிப்படையில் கும்மிடிப்பூண்டி போலீஸôர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

