முதல்வர் ரங்கசாமி வீட்டை முற்றுகையிட்ட கல்யாணசுந்தரம் ஆதரவாளர்கள்
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தர வலியுறுத்தி காலாப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் ஆதரவாளர்கள் இன்று மதியம் முதல்வர் ரங்கசாமி வீட்டில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


புதுச்சேரி: தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தர வலியுறுத்தி காலாப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் ஆதரவாளர்கள் இன்று மதியம் முதல்வர் ரங்கசாமி வீட்டில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 2011-ம் ஆண்டு பேரவை தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் காலாப்பட்டு தொகுதியில் போட்டியிட்டு பி.எம்.கல்யாணசுந்தரம் வெற்றி பெற்றார். கல்வி அமைச்சரான அவர் பின்னர் தேர்வு முறைகேடு தொடர்பாக பதவி இழந்தார்.
மேலும் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பரில் நடந்த மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் முதல்வர் ரங்கசாமி நிறுத்திய வேட்பாளருக்கு எதிராக 5 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். இதில் கல்யாணசுந்தரம் ஒருவராவார். இதனால் என்.ஆர். காங்கிரசில் போட்டியிட இருந்த கோகுலகிருஷ்ணன், பின்னர் அதிமுகவில் சேர்ந்து வெற்றி பெற்றார்.
இந்நிலையில் முதல்வர் ரங்கசாமி வரும் தேர்தலில் போட்டியிடும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்கள் முதல் கட்டப் பட்டியலை வெளியிட்டார். அதில் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டன. மீதமுள்ள 9 தொகுதிகளுக்கு பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார். அதில் காலாப்பட்டு தொகுதியும் ஒன்றாகும்.
இதற்கிடையே வியாழக்கிழமை முதல்வர் ரங்கசாமி வீட்டில் சத்ரு சம்ஹார யாகம் நடைபெற்றது. அப்போது கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.ஆதரவாளர்கள் நூற்றுக்குக்கும் மேற்பட்டோர் அங்கே குவிந்தனர்.
கல்யாணசுந்தரத்துக்கு ஆதரவாக கோஷமிட்ட அவர்கள் வரும் தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் எனக்கோரினர். பின்னர் யாகம் முடிந்து வெளியே வந்த முதல்வர் ரங்கசாமி, எந்த நேரத்தில் எது செய்ய வேண்டும் என எனக்கு தெரியும் என ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...