கடலூர்: கடலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மனுத்தாக்கலுக்கு கடைசி நாளான வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணிக்கு தமாகா வேட்பாளர் ஏ.எஸ்.சந்திரசேகரன் மனுத்தாக்கல் செய்தார்.
அதன்பின்னர் 3 மணி வரையில் யாரும் வராத நிலையில், மனுத்தாக்கல் முடிந்தது என்று அலுவலக வாசலில் நின்றுக் கொண்டிருந்த போலீஸார் நினைத்திருந்தனர்.
அப்போது திடீரென ஒருவர் அலுவலகம் உள்ளே நுழைந்தார் தான் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளதாக கூறினார். நேரம் முடிந்து விட்டதாக போலீஸார் கூறியும் தேர்தல் நடத்தும் அலுவலரை சந்திப்பதாக கூறி உள்ளேச் சென்றார். கோட்டாட்சியரான தேர்தல் நடத்தும் அலுவலர் நா.உமாமகேஸ்வரியை சந்தித்து வேட்புமனுத்தாக்கலுக்கான ஆவணங்களை வழங்கினார். ஆனால் மணி 3.05 ஆகியிருந்ததால் மனுவை வாங்க முடியாதென கோட்டாட்சியர் திருப்பியனுப்பினார்.
இதுகுறித்து அவரிடம் விசாரித்த போது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் கப்பியாம்புலியூரைச் சேர்ந்த கு.தங்கராசு(59) என்பது தெரிய வந்தது. சுயேட்சையாக போட்டியிட விரும்பிய இவர், மனுத்தாக்கலுக்கான விண்ணப்பங்களை ஏற்கனவே பெற்றுச் சென்றுள்ளார். விண்ணப்பத்துடன் வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதற்கான சான்றினை பெற்று வருவதற்காக மீண்டும் விழுப்புரம் சென்று வர நேரமாகி விட்டதாக கூறினார்.
5 நிமிடத்தில் மனுத்தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு தவற விட்ட சோகத்தில் திரும்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பை: வங்கதேசத்துக்கு 140 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நெதர்லாந்து!

ஐஐஎம் மும்பை-ல் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்..?

7 மாதங்களுக்கு முன்பு அணியில் இல்லை... அறிமுக உலகக் கோப்பை ஆட்டத்தில் மிரட்டிய ஆஸி. கோல்கீப்பர்!

மூவர் அரைசதம் விளாசல்; ஒருநாள் தொடரை முழுமையாகக் கைப்பற்றுமா வங்கதேசம்?
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


