மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

மகாமகக் குளத்தில் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை நீர்ப்பகுப்பாய்வு

கும்பகோணம் மகாமகக்குளத்தில் நீராடும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக 15 நிமிடங்களுக்கு ஒருமுறை நீரை பகுப்பாய்வு செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Updated On :13 பிப்ரவரி 2016, 7:19 am

கும்பகோணம் மகாமகக்குளத்தில் நீராடும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக 15 நிமிடங்களுக்கு ஒருமுறை நீரை பகுப்பாய்வு செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மகாமகக் குளத்தில் உள்ள தண்ணீர் அசுத்தப்படாமல் இருக்கும் வகையில், பொதுமக்களுக்கு நோய்த் தொற்றுகள் ஏற்படாத வகையிலும்  பொது சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் நீர்ப் பகுப்பாய்வு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மகாமக் குளத்திலுள்ள 20 தீர்த்தங்களுக்கும் 20 சுகாதார ஆய்வாளர்கள், நான்கு கரைகளுக்கும் 4 சுகாதார ஆய்வாளர்கள், தயார் நிலையில் 5 பேர் என மொத்தம் 29 பேர் இப்பணியில் ஈடுபடுகின்றனர். இவர்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவர்.

மகாமகக் குளத்திலுள்ள தீர்த்தங்களில் கால்மணி நேரத்துக்கு ஒருமுறை தண்ணீர் எடுக்கப்பட்டு ஆர்தோடொலுஜின் என்ற திரவம் சோதனைக் குழாயில் இடப்படுகிறது. அப்போது தண்ணீர் அளவு 2.0 என்ற அளவில் இருக்கிறதா என சரிபார்க்கப்படுகிறது. அதற்கு குறைவாக இருந்தால், உடனடியாக  குளத்தில் குளோரின் பவுடர் போடப்படும் என்கிறார் இப்பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார ஆய்வாளர்கள் ஆர்.சரவணன், டி.ராஜேந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.