தூத்துக்குடி அருகே அரசு பேருந்து தடுப்புச் சுவர் மீது மோதி விபத்து: 30 பேர் காயம்
தூத்துக்குடி அருகே அரசு பேருந்து சாலை தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்தனர்.


தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே அரசு பேருந்து சாலை தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்தனர்.
திருப்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று வந்தது. இந்தப் பேருந்தை மெய்ஞானபுரத்தை சேர்ந்த ஓட்டுநர் ஜெயக்குமார் சுரேஷ் என்பவர் ஓட்டி வந்தார்.
பேருந்து தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் உள்ள மாப்பிள்ளையூரணி விளக்கு அருகே வந்த போது ஓட்டுநர் தூக்கத்தில் இருந்ததால் நிலை தடுமாறி பேருந்து சாலை தடுப்புச் சுவர் மீது மோதி எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்துக்குள் இருந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் ஓட்டுநர் உள்ளிட்ட 15 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்த விபத்து குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சாலை விபத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...