தோல்வியால் துவள மாட்டோம்: வைகோ
சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியால், மதிமுக தொண்டர்கள் துவண்டுவிட மாட்டார்கள் என்று அக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.


சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியால், மதிமுக தொண்டர்கள் துவண்டுவிட மாட்டார்கள் என்று அக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எழும்பூரில் உள்ள தாயகத்தில் அக் கட்சியின் அவைத் தலைவர் சு.துரைசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பிறகு வைகோ செய்தியாளர்களிடம் கூறியது:-
சட்டப்பேரவைத் தேர்தலில் பணநாயகமே வெற்றிபெற்றுள்ளது. அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளும் வாக்காளர்களுக்குப் பணம் அளித்தே வெற்றிபெற்றனர். தேர்தலில் எங்கள் கட்சி தோல்வியைத் தழுவினாலும், மதிமுக தொண்டர்கள் யாரும் துவண்டுவிடவில்லை. மதிமுகவினர் மனஉறுதி மிக்கவர்கள். தேர்தலில் தோல்வி அடைந்தாலும், அவர்கள் இன்னும் உற்சாகமாகத்தான் இருக்கின்றனர். அவர்கள் போராளிகள். அநீதிகளை எதிர்க்க துணிந்தவர்கள்.
தேர்தல் ஆணையத்துக்கு உரிய அதிகாரம் அளிக்கப்படவில்லை. தகுதியற்ற வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யவோ, கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவோ அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இதனால்தான் அதிமுக ஆட்சியைப் பிடித்தது.
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்துவதும் படகுகளை பறிமுதல் செய்வதும் நடந்து வருகிறது. மத்திய அரசு தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டு கொள்வதில்லை. முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு அடிக்கடி கடிதம் எழுதினாலும் நடவடிக்கை எடுப்பதில்லை.
மக்கள் பிரச்னைக்காக தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணி இணைந்து போராடும் என்றார் அவர்.
கூட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கு 26 லட்டத்து 18 ஆயிரத்து 250 வாக்குகள் (6.4 சதவீதம்) கிடைத்தது. வாக்களித்த மக்களுக்கு நன்றி.
மது விற்பனை நேரத்தை மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் அமுல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
துணை பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, துரை பாலகிருஷ்ணன் ஆகியோர் உள்பட மதிமுக சார்பில் போட்டியிட்ட 27 வேட்பாளர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...