பழைய சிறைச்சாலையை இடித்து விட்டு வாகன நிறுத்தம் அமைப்பு: முதல்வர்
புதுச்சேரி பெரிய மார்க்கெட் அருகே பழைய சிறைச்சாலையை இடித்து விட்டு பல்நோக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படும் என முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்துளளார்.


புதுச்சேரி பெரிய மார்க்கெட் அருகே பழைய சிறைச்சாலையை இடித்து விட்டு பல்நோக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படும் என முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்துளளார்.
முதல்வராக நாராயணசாமி பதவியேற்றதில் இருந்து பல்வேறு துறைகளில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறார். ஏற்கெனவே அரசுப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு குறைபாடுகளை தீர்க்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் நகரின் முக்கிய மார்க்கெட்டான நேரு வீதியில் உள்ள பெரிய மார்க்கெட்டில் முதல்வர் நாராயணசாமி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
மார்க்கெட்டில் உள்ள காய்கனி விற்கும் இடம், மலர்கள் விற்குமிடம், மீன் அங்காடி உள்ளிட்ட பகுதிகளில் பார்வையிட்டார்.
அவருடன் அமைச்சர் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., உள்ளாட்சித்துறை இயக்குனர் முகமதுமன்சூர், நகராட்சி ஆணையாளர் சந்திரசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
பெரிய மார்க்கெட் வியாபாரிகள் கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மார்க்கெட்டில் இல்லை என்றும், மழை, வெயில் காலங்களில் மேற்கூரை இல்லாமல் அவதிப்படுவதாகவும், வியாபாரம் நடைபெறும் பகல் வேளையில் துப்புரவு பணி மேற்கொள்வதால் பொதுமக்களுக்கும், தங்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக முதல்வரிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து நகராட்சி ஆணையாளரிடம், இரவு நேரத்தில் துப்புரவு பணிகளை மேற்கொள்ளும்படி நாராயணசாமி உத்தரவிட்டார். மேலும் வியாபாரிகளின் குறைகளை ஒரு மாதத்திற்குள் தீர்த்து வைப்பதாகவும் உறுதி அளித்தார். பின்னர் நேருவீதியில் உள்ள பழைய சிறைச்சாலை வளாகத்தை பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெரியமார்க்கெட் வியாபாரிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். வழுக்காத தரை அமைத்துதர கேட்டுள்ளனர். கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஒரு மாத காலத்திற்குள் செய்துதருவதாக உறுதியளித்துள்ளேன்.
மார்க்கெட் வளாகத்திற்குள்ளேயே சில இடங்களில் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். இது பொதுமக்கள் நடந்து செல்ல இடையூறாக உள்ளது. அதை அப்புறப்படுத்தும்படி கூறியுள்ளேன்.
பல்நோக்கு வாகன நிறுத்துமிடம்
பழைய சிறை வளாகத்தில் உள்ள கட்டடங்கள் மிகவும் சிதிலமடைந்துள்ளன. அவற்றை இடித்துவிட்டு அங்கு பல்நோக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும். இதற்கு பொதுப்பணித்துறை, உள்ளாட்சிதுறையிடம் தடையில்லா சான்று பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும். வியாபாரிகளிடம் நடைபாதையை ஆக்கிரமிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...