மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பண நடமாட்டத்தைத் தடுக்க பிரதமர் தலையிட வேண்டும் என திமுக கோருவது வேடிக்கை: இல.கணேசன்

தமிழகத்தில் பண நடமாட்டத்தை தடுக்க பிரதமர் மோடி தலையிட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோருவது வேடிக்கையாக உள்ளது என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறியுள்ளார்.

News image
Updated On :4 மே 2016, 11:42 am

சுஜித்குமார்

புதுச்சேரி: தமிழகத்தில் பண நடமாட்டத்தை தடுக்க பிரதமர் மோடி தலையிட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோருவது வேடிக்கையாக உள்ளது என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறியுள்ளார்.

புதுச்சேரி மாநில பாஜக சார்பில் தேர்தல் அறிக்கையை புதன்கிழமை வெளியிடட்ட பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் தற்போதைய தேர்தலில் அதிகளவில் பண நடமாட்டம் காணப்படுகிறது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பண நடமாட்டத்தை கட்டுப்படுத்த பிரதமர் மோடி தலையிட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோருவது வேடிக்கையாக உள்ளது. தற்போது ஜெயலலிதா முதல்வராக உள்ளதால், அவர் இக்கோரிக்கையை எழுப்புகிறார். அதே நேரத்தில் தற்போது கருணாநிதி முதல்வராக இருந்து மோடி இதில் தலையிட வேண்டும் என கோரினால், மாநில சுயாட்சிக்கு ஆபத்து என குரல் தருவார்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு மாநில அரசுகளுடன் இணைந்து தான் செயல்பட விரும்புகிறது. மாநில அரசுக்கு என உள்ள அதிகாரங்களில் மத்திய அரசு தலையிடமுடியாது. அதே நேரத்தில் தேர்தல் ஆணையம் தான் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.