அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ராஜீவ் கொலையின் பின்னுள்ள மர்மங்களை சொல்லும் நளினியின் புத்தகம்: சென்னையில் வெளியீடு!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நளினியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் "ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும்; பிரியங்கா, நளினி .....

News image
Updated On :24 நவம்பர் 2016, 2:49 pm

DIN

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நளினியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் "ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும்; பிரியங்கா, நளினி சந்திப்பும்"  சென்னையில் இன்று வெளியிடப்பட்டது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யயப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் நளினியும் ஒருவர். அந்த கொலையின் பின்னணி பற்றியும், வழக்கு விசாரணை குறித்தும், வேலூர் சிறையில் நடைபெற்ற நளினி-பிரியங்கா காந்தி சந்திப்பு குறித்தும் பரபரப்பான தகவல்கள் அடங்கிய நளினியின் சுயசரிதை புத்தகம்  "ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும்; பிரியங்கா, நளினி சந்திப்பும்" சென்னையில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மூத்த பத்திரிகையாளரான பா. ஏகலைவன் தொகுத்துள்ள இந்த புத்தகத்தில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

யாழ் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள இந்த புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று மாலை சென்னை வடபழனியில் நடந்தது. புத்தகத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட, முதல் பிரதியை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பெற்றுக்கொண்டார்.

இந்த விழாவில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் கட்சி திருச்சி வேலுச்சாமி, முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன், நளினியின் தாயார் பத்மாவதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.