தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

டிசம்பர் 2ம் தேதி முதல் தமிழகத்தில் மழை வாய்ப்பு

வடகிழக்கு பருவ மழை தொடங்கியதில் இருந்தே வறண்ட வானிலை நிலவும் தமிழகத்தில் டிசம்பர் 2ம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையச் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :25 நவம்பர் 2016, 11:10 am


சென்னை: வடகிழக்கு பருவ மழை தொடங்கியதில் இருந்தே வறண்ட வானிலை நிலவும் தமிழகத்தில் டிசம்பர் 2ம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையச் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

அக்டோபர் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கிய வடகிழக்குப் பருவ மழையால் சென்னை உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் ஒரு சில நாட்கள் மழை பெய்தது.

ஆனால், கடந்த 3 வாரங்களாக தமிழகத்தின் ஓரிரு இடங்களைத் தவிர பரவலாக வறண்ட வானிலையே நிலவுகிறது. மேலும், சில பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது.

இந்த நிலையில், டிசம்பர் 2ம் தேதி முதல் ஒரு வார காலத்துக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.