முதல்வர் ஜெயலலிதா சீக்கிரம் குணம் அடைந்து வீட்டிற்கு செல்வார்: நடிகை சரோஜாதேவி தகவல்
முதல்வர் ஜெயலலிதா சீக்கிரம் குணம் அடைந்து வீட்டிற்கு செல்வார் என்று அவரை இன்று நலம் விசாரிக்கச் சென்ற பழம்பெரும் நடிகை சரோஜாதேவி தெரிவித்தார்.


சென்னை: முதல்வர் ஜெயலலிதா சீக்கிரம் குணம் அடைந்து வீட்டிற்கு செல்வார் என்று அவரை இன்று நலம் விசாரிக்கச் சென்ற பழம்பெரும் நடிகை சரோஜாதேவி தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா நுரையீரல் தொற்று நோய் காரணமாக கடந்த மாதம் 22ம் தேதி முதல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பலரும் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று அதிமுக தலைவர்கள், அமைச்சர்கள், மருத்துவர்களை சந்தித்து ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரிக்க பழம்பெரும் நடிகையான சரோஜா தேவி இன்று அப்போலோ மருத்துவமனை சென்றார். அங்கு அதிமுக தலைவர்களிடம், அமெரிக்க மருத்துவரிடமும் ஜெயலலிதாவின் உடல் நிலை விசாரித்தார்.
பின்னர், வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அமெரிக்க டாக்டரிடம் பேசினேன். அவர் முதல்வரின் உடல் நிலை நன்றாக இருப்பதாக தெரிவித்தார். ஜெயலலிதா நன்றாக இருக்கிறார்கள். அதனால் அவர் சீக்கிரம் குணம் அடைந்து வீட்டிற்கு சென்று விடுவார். ஒரு சோதனை மாதிரி இது அவருக்கு வந்திருக்கிறது. சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்.
இவ்வாறு சரோஜா தேவி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...