ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

விராலிமலை அருகே சந்தை கூட்டத்துக்குள் புகுந்த அரசு பேருந்து: இருவர் சாவு, 15 பேர் காயம்

விராலிமலை அருகே திங்கள்கிழமை நேரிட்ட சாலைவிபத்தில் கோழி வியாபாரி இருவர் உயிரிழந்தனர்,15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

News image
Updated On :3 ஏப்ரல் 2017, 7:20 am

சி. உதயகுமார்

விராலிமலை அருகே திங்கள்கிழமை நேரிட்ட சாலைவிபத்தில் கோழி வியாபாரி இருவர் உயிரிழந்தனர்,15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள பாம்பாட்டிபட்டியைச் சேர்ந்தவர் கருப்பன் மகன் சுப்பன்(65),புரத்தகுடியைச் சேர்ந்தவர் ஞனமுத்து மகன் செல்வாஜூ(50) இவர்கள் இருவரும் கோழி வியாபாரிகள் என கூறப்படுகிறது. இந்த நிலையில்  விராலிமலை-மணப்பாறை சாலையிள் உள்ள ராஜாளிபட்டியில் திங்கள்கிழமை காலை நடைபெறும் கோழி சந்தைக்கு வந்து வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, புதுக்கோட்டையிலிருந்து விராலிமலை வழியாக மணப்பாறை சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ராஜளிபட்டி அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இருசக்கரவாகனத்தின் மீது மோதி நிற்காமல் சந்தை கூட்டத்துக்குள் புகுந்துள்ளது இதில் சுப்பன், செல்வராஜூ அகிய இருவரும் தலையில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இவ்விபத்தில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் வளையபட்டியைச் சேர்ந்த முருகன் மனைவி ரேவதி(23) உள்பட கூட்டத்தில் இருந்த 15 பேர் காயமடைந்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்     

தகவலறிந்து நிகழ்விடம் வந்த விராலிமலை காவல்துறையினர் சடலத்தை கைபற்றி உடற்கூறு ஆய்வுக்கு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து பேருந்து ஓட்டுநர் புதுக்கோட்டை வாரிபட்டியைச் சேர்ந்த சண்முகம் மகன் ரவியை(40) கைது செய்து விசாரிக்கின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.