கிழக்கு கடற்கரை சாலையில் லாரிகள் மோதல்: ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்!
சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் வேணாங்குப்பட்டு அருகே அமைந்துள்ள கொளத்தூரில் இரு லாரிகள் மோதிக்கொண்டதில் ...


சென்னை: சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் வேணாங்குப்பட்டு அருகே அமைந்துள்ள கொளத்தூரில் இரு லாரிகள் மோதிக்கொண்டதில் ஒருவர் பலியானார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வேணாங்குப்பட்டு அருகே அமைந்துள்ளது கொளத்தூர். இங்கே கெமிக்கல் லோடு ஏற்றி வந்த லாரி ஒன்று செவ்வாய் இரவு பழுதாகி நின்று கொண்டிருந்தது. இன்று காலை 11 மணி அளவில் புதுச்சேரியில் இருந்து கல்பாக்கம் நோக்கி செங்கல்லோடு ஏற்றி வந்த நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.
இதில் செங்கல் லோடு லாரியை ஓட்டி வந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானர். படுகாயம் அடைந்த மற்றொருவர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து சூரணாம்பேடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...