/

அதிமுக ஆட்சியை 4 ஆண்டுகளுக்கு யாரும் கலைக்க முடியாது: சொல்கிறார் சுப்ரமணியன் சுவாமி!

அதிமுக ஆட்சியை இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு யாரும் கலைக்க முடியாது என்று பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:39 pm

DIN

சென்னை: அதிமுக ஆட்சியை இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு யாரும் கலைக்க முடியாது என்று பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

சென்னையிலிருந்து தில்லி செல்லும் வழியில் விமானநிலையத்தில் செய்தியாளர்களை அவர் இன்று சந்தித்தார். அப்பொழுது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது.  

தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக ஆட்சியை இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு யாரும் கலைக்க முடியாது.

நீட் விவகாரத்தினை பொறுத்த வரை தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது பற்றி இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஆயுள் தண்டனைக் கைதிகள்  யாரையும் விடுவிக்கக் கூடாது , அவர்களுக்கு ஏற்கனவே மரண தண்டனையானது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.