அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அரசியல் மேடையாக நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம்: திமுகவுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் 

அரசியல் மேடையாக நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம் என்று கட்சராயன் ஏரி தொடர்பான வழக்கில் திமுகவுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :30 ஆகஸ்ட் 2017, 7:52 am

DIN

சென்னை: அரசியல் மேடையாக நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம் என்று கட்சராயன் ஏரி தொடர்பான வழக்கில் திமுகவுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட கட்சராயன் குட்டை ஏரியினை திமுகவினர் தூர் வாரினர்.  அந்த ஏரியினை ஸ்டாலின் பார்வையிட வருவதாக எழுந்த தகவலுக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.  இதனைத் தொடர்ந்து ஏரியை ஸ்டாலின் பார்வையிட போலீஸ் தடுப்பதாக சென்னை  உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் சார்பில் மூத்த வக்கீல் இளங்கோ மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி துரைசாமி ஏரியினை பார்வையிட ஸ்டாலினுக்கு அனுமதி வழங்கி இருந்தார். ஆனாலும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஏரியை பார்வையிடுவதற்காக வரும் போது, அவரை வரும் வழியிலேயே போலீசார் கைது செய்தனர்.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்  திமுக தொடர்ந்த வழக்கினை விசாரித்த நீதிபதி துரைசாமி தலைமையிலான அமர்வு அரசுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பியது. ஸ்டாலின் ஏரியை பார்வையிடுவதற்கு தடை விதித்தது ஏன் என்று கேட்ட நீதிபதிகள், இது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரினர்.

பின்னர் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது ஸ்டாலினை தடுத்தது சட்டப் பிரச்னையா அல்லது கெளரவப் பிரச்னையா எனவும், குறிப்பிட பகுதி தடைவிதிக்கப்பட்ட பகுதியா என்றும் வரிசையாக கேள்விகளை அடுக்கினர்.

ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுமென்பதாலேயே ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. 

இந்த நிலையில் இந்த வழக்கு கடந்த 8-ஆம் தேதியன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது சர்ச்சைக்குரிய சேலம் கட்சராயன் ஏரியை பார்வையிட ஸ்டாலினுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. அவருடன் சேர்ந்து 25 பேர் அந்த ஏரியினைப் பார்வையிடலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கிரிராஜன் என்பவர் தொடர்ந்திருந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அரசியல் மேடையாக நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம் என்று திமுகவுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ரமேஷ் கண்டனம் தெரிவித்தார்.

மேலும் கட்சராயன் ஏரி தொடர்பான வழக்கில் திமுக முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். கட்சராயன் ஏரியினை பார்வையிட செல்வதாக கூறி இருந்த பொழுது, நீட் தேர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள ஸ்டாலின்  சென்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதான ஸ்டாலின் அன்றே விடுவிக்கப்பட்டு விட்டதால் கிரிராஜனின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ரமேஷ் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.