அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

புத்தாண்டு: குறுந்தகவல் அனுப்ப பிஎஸ்என்எல் சலுகை

புத்தாண்டையொட்டி, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு குறுந்தகவல் மூலம் வாழ்த்து செய்தி அனுப்புவதற்கு வசதியாக பண்டிகை கால காம்போ வவுச்சர் (இர்ம்க்ஷர் யர்ன்ஸ்ரீட்ங்ழ்) என்ற சலுகைத் திட்டத்தை

News image
Updated On :28 டிசம்பர் 2017, 7:59 pm

DIN

புத்தாண்டையொட்டி, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு குறுந்தகவல் மூலம் வாழ்த்து செய்தி அனுப்புவதற்கு வசதியாக பண்டிகை கால காம்போ வவுச்சர் (இர்ம்க்ஷர் யர்ன்ஸ்ரீட்ங்ழ்) என்ற சலுகைத் திட்டத்தை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பண்டிகை நாளில் குறுந்தகவல் மூலம் வாழ்த்து அனுப்பினால், ஒவ்வொரு குறுந்தகவலுக்கும் ரூ.1 கட்டணம் வசூலிக்கப்படும். இதனால், வாடிக்கையாளர்கள் பண்டிகை காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே குறுந்தகவல் அனுப்பும் நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில், சந்தாதாரர்களுக்கு பண்டிகை காலப் பரிசு அளிக்கும் வகையில், காம்போ வவுச்சர் என்ற சலுகைத் திட்டத்தை பி.எஸ்.என்.எல் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய திட்டத்தின்படி, சந்தாதாரர்கள் 3 நாள்களுக்கு இதை பயன்படுத்த முடியும். இதற்கான கட்டணம் ரூ.74 . இத்திட்டத்தின்படி, தினமும் 100 குறுந்தகவல்கள் அனுப்புவது, தினமும் 1 ஜி.பி, டேட்டா வசதி 
ஆகியவற்றை பெற முடியும். இச்சலுகை ஜனவரி 1-ஆம் தேதியுடன் முடிவடைகிறது என பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.