மதுரவாயல் உயர்நிலை மேம்பாலத் திட்டம்: தூண்களை மாற்றி அமைக்கக் கோருகிறது தமிழக அரசு
மதுரவாயல் உயர்நிலை மேம்பாலத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமெனில், ஏற்கெனவே அமைக்கப்பட்ட தூண்களை மாற்றியமைக்க வேண்டும்


மதுரவாயல் உயர்நிலை மேம்பாலத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமெனில், ஏற்கெனவே அமைக்கப்பட்ட தூண்களை மாற்றியமைக்க வேண்டும் என தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளதாகவும், எனினும் மாநில அரசின் ஒத்துழைப்புடன் இத்திட்டதை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகரத்திலிருந்து வெளியூர் செல்லும் வாகனங்கள், வெளியூர்களிலிருந்து அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய மருத்துவமனைகளுக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்குவதை தவிர்க்கும் நோக்கில், மதுரவாயல் உயர்நிலை மேம்பாலத் திட்டம் வகுக்கப்பட்டது.
சென்னைத் துறைமுகத்தின் வாயில் எண் 10 -லிருந்து கூவம் நதி (17.50 கி.மீ), பூந்தமல்லி நெடுஞ்சாலை (1.50 கி.மீ) வழியாக மதுரவாயல் சென்று வெளிவட்டச் சாலையுடன் இணைக்கும் இத்திட்டத்துக்கு 2010 செப்டம்பரில், அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து மேம்பாலப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், மேம்பால கட்டுமானப் பணிகளுக்கு தமிழக அரசு 2012 பிப்ரவரியில் தடை விதித்தது. இதுதொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும், இத்திட்டத்தையே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரத்து செய்துவிட்டது. இந்த நிலையில்,இத்திட்டத்தை நிறைவேற்ற தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த சிறப்புப் பேட்டி:
சென்னைத் துறைமுக வளர்ச்சிக்காக கொண்டுவரப்பட்ட மதுரவாயல் உயர்நிலை மேம்பாலத் திட்டத்தை நிறைவேற்றுவது அவசியமானதாகும். தற்போது கூவத்தின் நீரோட்டம் பாதிக்கப்படாமல் இருக்க ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள இரு தூண்கள் கொண்ட பாலத்தை ஒரே தூணாகக் கொண்டு அமைக்க வேண்டும் என மாநில அரசு அதிகாரிகள் நிபந்தனை விதிக்கின்றனர்.
ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தூண்களை எப்படி மாற்றியமைப்பது? எனவே மீதம் உள்ள தூண்களை வேண்டுமானால் அவ்வாறு அமைக்கலாம் என பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடர் ஆய்வுகள், ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இதில் சுமூகமான முடிவுகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். பின்னர் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள மேல் முறையீட்டு மனு வாபஸ் பெறப்பட வேண்டும். பின்னர்தான் பணிகளைத் தொடங்க முடியும். இதுகுறித்து நவம்பர் மாதமே தமிழக அரசு ஒப்புதல் அளித்துவிட்டதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...