ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தமிழ்த்தாய் வாழ்த்தை கற்றுக்கொடுத்ததில் தவறில்லை: பிக் பாஸ் சர்ச்சைகளுக்கு கமல் பதில்

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் குறித்து நடிகர் கமல்ஹாசன் விளக்கமளித்தார்.

News image
Updated On :12 ஜூலை 2017, 4:15 pm

DIN

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக நாள்தோறும் பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், அது சமூக சீர்கேட்டை ஏற்படுத்துவதாக இன்று புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். அவர் பேசியதாவது:

என்னை சிறையில் அடைத்துப் பார்க்க சிலருக்கு விருப்பம். முடிந்தால் என்னை கைது செய்தும் பார்க்கட்டும். என்னை கைது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்திய நீதித்துறையின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.

எனக்கு அனைத்து ரசிகர்களும் தேவை. கிரிக்கெட் எந்த அளவுக்குத் தேவையோ, அந்த அளவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியும் தேவை. நான் எதைச் செய்தாலும் விருப்பமுடன் தான் செய்கிறேன். பிக் பாஸ் நிகழ்ச்சியை விரும்பி ஏற்றுக்கொண்டேன். எதிர்மறை விமர்சனங்களை நேர்மையாக ஏற்றுக்கொள்கிறேன். 

தசாவதாரம் வெளியான போது என்னை கொண்டாடினார்கள், தற்போது எதிர்க்கிறார்கள். எந்த அரசாக இருந்தாலும் நான் எதிர்த்துப் பேசுவேன். அரசியல் குறித்து பேச எனக்கு விருப்பமில்லை. 37 ஆண்டுகளாக நற்பணி மன்றம் மூலமாக பல நன்மைகளைச் செய்துள்ளேன். தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று முதலில் கூறியது நான்தான். 

ஐன கன மன பெங்காலி பாட்டு அதை முதலில் நாம் சரியாகப் பாடுவதில்லை. அதுபோலத்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. ஏனென்றால் அது அவர்களுக்கு முழுமையாகத் தெரியாது. எனவே அதைக் கற்றுக்கொடுத்தேன் அதில் தவறில்லை.

மக்களுக்காக நான் என்றும் பேசுவேன். சினிமாவை நசுக்கும் எந்த வரியையும் விதிக்காதீர்கள். சாதி என்று பேசுகிறார்களே அதை முதலில் உங்களால் நீக்க முடியவில்லை. தமிழகத்தில் மட்டுமே சைவம் மதத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது. அரசின் செயல்பாடு குறித்து மதிப்பெண் போடுவது என் வேலை இல்லை. தமிழக அரசியலில் எனது பங்கும் இருக்கிறது. 

அரசியலுக்கு நான் வரவேண்டிய அவசியமில்லை, நல்ல தலைவர் யாராவது வந்தால் போதும் என்றார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.