/

கமலுக்கு அரசியல் தெரியாது: முதல்வர் பழனிசாமி

கமல் நடிக்கிறார். அவருக்கு அரசியல் பற்றி தெரியாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:28 pm

DIN

கமல் நடிக்கிறார். அவருக்கு அரசியல் பற்றி தெரியாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் புதன்கிழமை மாலை நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் கடற்கரை சாலையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்றனர். அங்கு, அவரது சமாதியில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதேபோன்று, எம்.ஜி.ஆர். நினைவிடத்திலும் அவர்கள் மரியாதை செலுத்தினர். இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் லட்சியத்தை நிறைவேற்றியுள்ளோம். சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் சிறப்பாக நடந்து நிறைவு பெற்றுள்ளது. இக்கூட்டத்தொடரில் மக்களுக்குத் தேவையான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை உடனடியாகச் செயல்படுத்தப்பட்டு ஏழை, எளிய மக்கள் வசதியாக வாழ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பின்னர், நடிகர் கமல் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கமல் நடிக்கிறார். அவருக்கு அரசியல் பற்றித் தெரியாது. அரசியலுக்கு வந்த பிறகு புகார் சொன்னால் அதற்குப் பதில் சொல்கிறோம் என்றார்.
மேலும், அவர் கூறுகையில், எதிர்க்கட்சிகள் எப்படி நடந்து கொண்டனஎன்பதை, சட்டப் பேரவையில் இருந்த பத்திரிகையாளர்கள் தெரிந்து கொண்டனர். குட்கா விவகாரம் தொடர்பாக புள்ளிவிவரத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் இரு அணிகளும் இணைய வாய்ப்பு இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.