அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பதவி போனாலும் பரவாயில்லை; பாஜகவுக்கு ஓட்டு இல்லை: தமிமுன் அன்சாரி அதிரடி!

என்னுடைய பதவியே பறிபோனாலும் ஜனாதிபதி தேர்தல் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டேன் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்

News image
Updated On :21 ஜூன் 2017, 11:45 am

DIN

சென்னை: என்னுடைய பதவியே பறிபோனாலும் ஜனாதிபதி தேர்தல் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டேன் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தமிமுன் அன்சாரி. மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரான இவர், அந்த தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்   

ஆனால் தற்பொழுது அதிமுக மூன்று அணிகளாக சட்டமன்றத்தில் பிரிந்து செயல்பட்டு வருகிறது. முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது, அன்சாரி ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்தார். பின்னர் தற்பொழுது மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில்  முதல்வரின் பதிலில் திருப்தி இல்லாமல், இவரைப் போலவே அதிமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர்களான தனியரசு மற்றும் கருணாஸ் ஆகியோருடன் சேர்ந்து வெளிநடப்பு செய்தார்.

இந்நிலையில் தற்பொழுது ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் வேட்பாளரான ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார்.அதிமுக அநேகமாக பாஜகவுக்கு ஆதரவு தந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டேன் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார். அதிமுக கொறடா ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்துக்கு வாக்களிக்க உத்தரவிட்டாலும், தான் வாக்களிக்க போவதில்லை என்றும், அதன் காரணமாக தன்னுடைய பதவி பறிபோனாலும் பரவாயில்லை என்றும் அன்சாரி அறிவித்துள்ளார்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.