சென்னை: தண்டையார்பேட்டையில் விரைவில் புதிய ரயில் முனையம் உருவாக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி சென்னையில் தெரிவித்துள்ளார்.
தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் தெரிவித்ததாவது:
சென்னை தண்டையார்பேட்டையில் விரைவில் புதிய ரயில் முனையம் ஒன்று உருவாக்கப்படும். போதிய இடவசதி இன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முன்பே திட்டமிட்டபடி ராயபுரத்தில் ரயில் முனையம் அமைப்பது சாத்தியம் இல்லை. தண்டையார்பேட்டையில் புதிய ரயில் முனைய பணிகள் விரைவில் துவங்கப்படும்.
தாம்பரத்தைப் பொறுத்த அளவில் ரயில் முனையம் அமைக்கும் பணிகள் நிறைவுபெற்று விட்டன. ரயில்வே துறையின் அனுமதி கிடைத்தவுடன் முனையம் செயல்படத் துவங்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!

ஃபிஃபா ஆடவர் உலகக் கோப்பை வரலாற்றில் மீண்டும் பெண் நடுவர்கள்!

ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம்

1857 ஆம் ஆண்டு பெருங்கிளர்ச்சி மற்றும் அதற்கான காரணங்கள்!
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



