ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

அன்னவாசல் அருகே காவிரி குடிநீர் குழாய் உடைப்பு: 2 நாளாக வீணகும் குடிநீரால் அருகே குளம் போல் காட்சியளிப்பு

அன்னவாசல் அருகே காவிரி குடிநீர் செல்லும் குழாய் உடைப்பு ஏற்பட்டு அருகே உள்ள காட்டுப்பகுதிக்குள் சென்று தேங்கி நிற்பதால் குளம் போல் காட்சியளிக்கிறது.

News image
Updated On :13 மே 2017, 7:25 am

சி. உதயகுமார்

அன்னவாசல் அருகே காவிரி குடிநீர் செல்லும் குழாய் உடைப்பு ஏற்பட்டு அருகே உள்ள காட்டுப்பகுதிக்குள் சென்று தேங்கி நிற்பதால் குளம் போல் காட்சியளிக்கிறது. தண்ணீர் தட்டுபாடு நிலவும் இச்சூழலில் வீணாகும் குடிநீரை பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல்- விராலிமலை சாலை செங்கப்பட்டி அருகே பதிக்கப்பட்டுள்ள காவிரி குடிநீர் செல்லும் குழாய், அன்னவாசல் மற்றும் சுற்றுப் பகுதி குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த சுமார் 2 நாட்களுக்கு மேலாக இக்காவிரி குடிநீர் குழாய் சேதமடைந்து குழாயில் இருந்து அதிக அழுத்தத்துடன் வெளியேறும் குடிநீர் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குள் சென்று அங்கு தேங்கியுள்ளதால் அப்பகுதி குளம் போல் காட்சியளிக்கிறது. 

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்போர் கூறுகையில்: குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இச்சூழ்நிலையில் இதுபோல வீணாக வெளியேறும் குடிநீர் குழாயை சரிசெய்யாமால் மெத்தனப்போக்கை நிர்வாகம் கடைபிடித்து வருவதாகவும், சமுகவிரோதிகள் யாரேனும் வேண்டும் என்றே சேதப்படுத்தி குடிநீரை முறைகேடாக பயன்படுத்தி வருகிறார்களா என்று விசாரணை மேற்கொள்ள வேண்டும், மேலும் நிர்வாகம் போர்கால அடிப்படையில் குழாயை சீரமைத்து தரவேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.