டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சென்னை ஐ.ஐ.டியில் மாட்டுக்கறி விழா ஏற்பாடு செய்த மாணவர் சுராஜ் மீது தாக்குதல்!

மத்திய அரசு விதித்துள்ள மாட்டிறைச்சி தடை அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை ஐஐடி-யில் மாட்டுக்கறி உண்ணும் திருவிழா நடத்திய மாணவர் சுராஜ் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

News image
Updated On :30 மே 2017, 12:10 pm

DIN

சென்னை: மத்திய அரசு விதித்துள்ள மாட்டிறைச்சி தடை அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை ஐஐடி-யில் மாட்டுக்கறி உண்ணும் திருவிழா நடத்திய மாணவர் சுராஜ் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வெள்ளியன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி 1960ம் ஆண்டு வெளியிடப்பட்ட மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி  நாடு முழுவதும் இனிமேல் மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய முடியாது என்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.குறிப்பாக காங்கிரஸ் ஆளும் கர்நாடகா மற்றும் இடது சாரிகள் ஆட்சி நடக்கும் கேரள மாநில முதல்வர்கள் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் கேராளாவில் பல்வேறு இடங்களில் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் மாட்டிறைச்சி உணவு உண்ணும் போராட்டங்களை நடத்தின.

தமிழகத்திலும் நேற்றும் இன்றும் சென்னை,மதுரை மற்றும் கோவை உள்ளிட்ட இடங்களில் மாணவர் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் போராட்டங்களை நடத்தியுள்ளன.

இந்நிலையில் சென்னை ஐஐடி மாணவர்கள் சிலர் மத்திய அரசு விதித்துள்ள மாட்டிறைச்சி தடை அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மாட்டிறைச்சி உணவு உண்ணும் திருவிழாவில் ஈடுபட்ட புகைப்படங்கள் இணையதளங்களில்  வெளியாகி பரபரப்பாக பகிரப்பட்டது.

சென்னை ஐஐடி வளாகத்தில் 80-க்கும்மேற்பட்ட மாணவர்கள் கடந்த ஞாயிறு இரவு ஒன்று கூடினர். பின்னர் அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பிரட் மற்றும் மாட்டுக் கறி ஆகியவற்றை ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். மத்திய அரசின் உத்தரவை 'உணவு சர்வாதிகாரம்' என்று வர்ணித்த அவர்கள், அதற்கு நேர்மறையான விதத்தில் எதிர்ப்பு காட்டுவதற்காகவே தாங்கள் இதில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த போராட்டம் நடத்துவதற்கு ஐ.ஐ.டி நிர்வாகத்திடம் முறைப்படி நிர்வாகத்திடம் தெரிவித்து விட்டதாக கூறியுள்ளனர். 

இந்நிலையில் தற்பொழுது மாட்டுக்கறி உண்ணும் திருவிழா நடத்திய ஆய்வு மாணவர் சுராஜ் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  மாட்டுக்கறி உண்ணும் திருவிழா ஏற்பாட்டின் பின்னணியில் அம்பேத்கார் ஆய்வு மையம் என்னும் அமைப்பினர் இருந்ததாக தெரிவிக்கபப்டுகிறது. அதன் காரணமாக ஐ.ஐ.டி யில் செயல்படும் சில வலதுசாரி சிந்தனை கொண்ட அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கும், விழாவினை நடத்தியவர்களுக்கும்  இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதன் எதிரொலியாக இன்று மதியம் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சுராஜ் மீது மாணவர்கள் சிலர் சூழ்ந்து கொண்டு கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Story image

ஐ.ஐ.டி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ள காயமடைந்த மாணவரின் தரப்பு,காவல்துறையிடமும் புகார் தர உள்ளதாக கூறியுள்ளனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.